Social Icons

Friday, June 5, 2015

ஸ்பிரிங் ரோல்

தொகுப்பு: MJM Razan
என்னென்ன தேவை? (15க்கு)

முட்டைக்கோஸ், மெலிதாக சீவியது – 1 கப்
கேரட், மெலிதாக நறுக்கியது – 1/2 கப் 
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மைதா – 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரித்து எடுக்க 
ஸ்பிரிங் ரோல் ஷீட் – தேவைக்கேற்ப (Nuts n Spices, Nilgiris போன்ற Super  Marketகளில் கிடைக்கும்).


எப்படிச் செய்வது?


ஸ்பிரிங் ரோல் ஷீட்டை அரை மணி நேரம் முன்னதாகவே ஃப்ரீசரில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும். இதற்கு இடையே உள்ளே வைக்கும் ஸ்டஃப்பிங்கை தயாரித்து விடலாம்.

1. மெலிதாக நறுக்குவதற்கு முதலில் ஒரு சீவுக்கட்டையில் தோல் சீவிய கேரட்டை மெலிதாகச் செதுக்கவும். 
2. பிறகு அதை அடுக்கி, மெலிதாக நறுக்கவும்.
3. முட்டைக்கோஸை மெலிதாக அறியலாம். அல்லது சீவுக்கட்டையில் செதுக்கினாலும் அழகாக செதுக்க முடியும்.
4. ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, முட்டைக்கோஸையும் கேரட்டையும் அதில் சேர்க்கவும்.
5. மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும். 
6. இதில் உப்பு, சோயா சாஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து வேகும் வரை ஓரிரு நிமிடம்  வதக்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல செய்து கொள்ளவும்.
எடுத்து வைத்த ஸ்பிரிங் ரோல் ஷீட்டை ஒரு சுத்தமான ஈரத்துணியால் மூடி வைக்கவும். இப்படி ஈரத்துணியால் மூடி வைத்தால்தான் காய்ந்து போகாமல் இருக்கும். மேலும் ஒவ்வொரு ஷீட்டாக எளிதில் எடுக்க முடியும். 
8. ஒரு முனையில், 1 டேபிள்ஸ்பூன் அளவு தயாரித்த ஸ்டஃப்பிங்கை வைத்து கீழிருந்து  மேலே பாதி வரை சுருட்டவும்.
9.  இன்னொரு முனையில் சிறிது மைதா பசையை தடவி, படத்தில் காட்டிஉள்ளபடி சுருட்டி வைக்கவும். 
10. காய்ந்து போகாமல் இருக்க ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும். 
11. எண்ணெய் காய வைத்து, நான்கு ஐந்தை மிதமான தீயில்,  ஒன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு…

சுருட்டிய ஸ்பிரிங் ரோலை மூடி, ஃப்ரிட்ஜிலோ, ஃப்ரீசரிலோ வைத்து, தேவையான போது பொரித்துக் கொள்ளலாம்.  













No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips