Social Icons

Tuesday, June 2, 2015

ஜீப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது ப்ளூ-கனெக்ட் தொழில் நுட்பம்

தொகுப்பு: MJM Razan
ப்ளூடூத் அல்லாத சாதனத்தை ப்ளூடூத் வசதியுள்ள சாதனமாக மாற்றிக்கொள்ளுங்கள் ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட் தகவல் தொழில்நுட்ப துணை பொருள்கள், ஒலி/ஒளி மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் வரிசையில் இந்தியாவின் முன்னணி பிரான்டு ஆகும். இந்த நிறுவனம் ப்ளூ கனெக்ட் என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒலிபெருக்கிகள், கார் ஸ்டீரியோ, ஹெட்போன்கள் போன்ற ப்ளூடூத் அல்லாத சாதனத்தை ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்றுகிறது. 


* 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஸ்பீக்கர்களை ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்ற முடியும்.

* 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஹோம் தியேட்டரை  ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்ற முடியும்.

* துணை இன்புட் கொண்ட கார் ஸ்டீரியொவை ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்ற முடியும்.

* ஹெட்போன்களை ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்ற முடியும். 

ப்ளூ-கனெக்ட் ஒரு பல்வகை பயன்பாடு கொண்ட சாதனம் ஆகும். இதனால் பல பயன்பாட்டில் உள்ள சாதனங்களுக்கு ப்ளூடூத் அம்சத்தை குறைந்த செலவில் சேர்க்க முடியும். இதை பயனப்டுத்துவதும் தகவமைப்பதும் மிகவும் சுலபம். இது ஒரு EDR  கொண்ட ப்ளூடூத் 2.0 சாதனம் ஆகும். இந்த சாதனத்தின் கம்பிகளற்ற இணைப்பு தூரம் 10 மீட்டர்கள் ஆகும். A2DP வடிவமைப்பு கொண்ட அனைத்து ப்ளூடூத் சாதன்ங்களுடனும் இது பொருந்தும். 

ப்ளு-கனெக்ட் ஒலி அவுட்புட்டுக்காக 3.5mm ஆடியோ ஜேக்குடன் வருகிறது. இதற்குள் ஒரு li-ion பேட்டரியும் உள்ளது. இந்த சாதனம் ஒரு ஆன்/ஆஃப் சுவிச்சும் இரண்டு LED இன்டிகேட்டர்களையும் கொண்டுள்ளது. இது ஒரு மிகவும் சிறிய எடை குறைவான பொருள் ஆகும்.   

“ப்ளூடூத் அம்சம் இல்லாத பல பழைய மற்றும் புதிய ஆடியோ சாதனங்கள் உள்ளன. ஸ்மார்ட்போனோ, டேப்லெட்டோ அல்லது லேப்டாப்போ இன்று அனைவரும் தங்கல் இசையை தங்களுடனே எடுத்து செல்கிறார்கள். ப்ளூடூத் வழியாக இசையை ஒலிக்க செய்வது மிகவும் சுலபம் மற்றும் வசதியானது. ப்ளு கனெக்ட் என்பது எந்த ஒரு ஆடியோ சாதனத்தையும் அந்த சாதனத்தை மாற்றும் தேவை இல்லாமல் அதை ப்ளூடூத் வசதியுள்ளதாக சுலபமாக மாற்றுகிறது. இது மிகவும் செலவு குறைந்த பயன்படுத்த எளிதான சாதனம் ஆகும்” என்கிறார் ஜீப்ரானிக்ஸின் விற்பனை இயக்குநர் பிரதீப் தோஷி.

ப்ளு-கனெக்ட் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸிடமிருந்து 1 வருட வாரண்ட்டியுடன் வருகிறது.








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips