Social Icons

Wednesday, May 6, 2015

குறுகிய இடத்தில் தானாகவே பார்க்கிங் செய்துகொள்ளும் அதிநவீன EOssc2 கார்

தொகுப்பு: MJM Razan
நமது நகரங்களில் பரபரப்பான நேரங்களில் காரை பார்க்கிங் செய்வது மிகவும் கடினமானதாகும், மேலும், அவசர நேரங்களில் இறுக்கமான இடத்தில் சிக்கி இருக்கும் காரை எடுப்பதும் கடினமாகும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜெர்மன் பொறியாளர்கள் புதுமையான தீர்வை கண்டறிந்துள்ளனர்.
 அதாவது, இருந்த இடத்திலேயே திரும்பி, அளவை சுருக்கி, ஒரு நண்டு போன்று பக்கவாட்டில் நகர்ந்து சென்று தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் ஒரு சிறிய எலக்ட்ரிக் காரை வடிவமைத்துள்ளனர். EOssc2 என்பது 'மெகா நகரங்களுக்காக தீவிர வளைந்து கொடுக்கும் (ultra flexible) மைக்ரோ கார்' ஆகும். இதனை வருங்காலத்தில் மற்றவைகளுடன் இணைத்து ரயிலை போன்று உருவாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

ஒரு பரந்த அளவிலான பிளாட் உடலை கொண்ட நண்டு போல குறுகிய இடங்களில் எளிதாக குறைத்துக்கொள்ளக்கூடிய வகையில் இந்த EOssc2 கார் செயல்படும். இந்த EOssc2 காரின் வீல்களை அவ்விடத்திலேயே நமக்கேற்றவாறு திருப்பிக்கொள்ளலாம். மேலும் சிறிய இடத்தில் பார்க்கிங் செய்வதற்கு ஏற்றவாறு அதனுடைய அளவை சுறுக்கி பக்கவாட்டில் நகர்ந்து சென்று தானாகவே பார்க்கிங் செய்துகொள்ளும். இதன் வருங்கால மேம்பாட்டில் ஒரு காரை மற்ற கார்களுடன் ரயிலை போன்று இணைத்து செல்லலாம். மேலும் நமக்கு தேவைப்பட்டால் ஆட்டோமெட்டிக் ஆன் செய்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாம். 

சேட்(chat) செய்ய வேண்டும் என்று நினைத்தால் இணைப்பில் இருக்கும் மற்றவர்களுடன் பேசிக்கொள்ளலாம். மற்றும் தேவைப்படும் போது இணைப்பில் இருந்து விடுபட்டு தனியாகவும் செல்லலாம். EOssc2 கார் 40mph (65 கிமீ / மணி) வேகத்தில் பயணிக்கும். இதில் செமி-ஆட்டோனோமஸ் அம்சங்களக்கு ஏற்றவாறு மாற உள்ளமைக்கப்பட்ட கேமரா மற்றும் LIDAR சென்சார்கள் அதன் ரூஃப்பில் உள்ளதால் இடத்திற்கேற்றவாறு தானாகவே செயல்படும். கடந்த மூன்று வருட காலமாக இந்த காரை 10 மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. EOssc2 கார் தற்போது ப்ரெமந் மற்றும் டேலியந் போன்ற சீன நகரங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips