Social Icons

Sunday, May 24, 2015

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய ரெனால்ட் க்விட்!

தொகுப்பு: MJM Razan
ரெனால்ட் நிறுவனம், தனது புதிய படைப்பான ரெனால்ட் க்விட்டை சென்னையில் நேற்று அறிமுகப் படுத்தியது. இந்தக்கார் ரூ.3 லட்சம் முதல் ரூ. 4 லட்சத்திலேயே கிடைக்குமென்று ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கர்லோஸ் கோஸ்ன் தெரிவித்துள்ளார். இந்தக்காரை பிரான்சின் ரெனால்ட் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான ஜப்பானின் நிசான் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. நடுத்தர மக்களை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் 3 சிலிண்டர்களுடன் 800 சிசி திறனுடைய என்ஜினை கொண்டது. அதனால் மாருதி ஆல்டோ, ஹூண்டாய் இயோ உள்ளிட்ட கார்களுக்கு இது போட்டியாக விளங்கும் என்று கூறப்படுகிறது.


இந்தக்கார் வரும் பண்டிகை காலமான செப்டம்பர் அல்லது நவம்பரில் விற்பனைக்கு வரவுள்ளது.

அறிமுக நிகழ்ச்சியில் கோஸ்ன் மேலும் கூறியது:

ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள க்விட் கார் புதிய வகையான தொடக்கமாக இருக்கும். இந்திய ஆட்டொமொபைல் சந்தையில் ரெனால்ட்டின் பங்களிப்பு 1.5 சதவீதமாக உள்ளது. அதை 5 சதவீதமாக்குவதே எங்கள் இலக்கு என்றார்.

பெட்ரோலில் இயங்கக்கூடிய ரெனால்ட் க்விட்டில் ரேடியோ, புளூ டூத் வசதி, மேப்பிங் நேவிகேஷன் வசதி, 7 அங்குல தொடுதிரை, 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பிளாஸ்டிக் பாடி என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த கார் முதலாவதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். உலகளவில் இந்தியாவுக்கு பிறகே அறிமுகப்படுத்தப்படும்.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips