Social Icons

Thursday, May 28, 2015

கிரெடிட் அட்டை அளவில் சிறிய கம்ப்யூட்டர்

தொகுப்பு: MJM Razan
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் கிரெடிட் கார்டு சைஸில் கம்ப்யூட்டர் ஒன்றை உருவாக்கி வருகிறது. வெறும் 570 ரூபாய்க்கு (அமெரிக்க மதிப்பில் 9 டாலர்) கிடைக்கும் இந்த கம்ப்யூட்டர் விரைவில் சந்தைக்கு வருகிறது. பாக்கெட் சிப் என்றழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர், 1 ஜிகாஹெர்ட்ஸ் (1 Ghz) பிராஸசரும், 512 எம்.பி. ராமும் (512 MB RAM), 4 ஜி.பி. ஆன்போர்டு சேமிப்பும் கொண்டதாக இருக்கும்.


இதில் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பங்களான வை-பை மற்றும் ப்ளூடூத்தும் இடம்பெற்றிருக்கும். லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இந்த கேட்ஜட் இயங்கும் என்றும் அடிப்படை காம்போசைட் கனெக்டரைக் கொண்டு மானிட்டருடன் இது இணைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

வரும் 2016 ஆம் ஆண்டு இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விலை மிக மலிவாக உள்ளதால், கம்ப்யூட்டரில் உள்ள சிப்பானது, மிகவும் அடிப்படையான மதர்போர்டை கொண்டதாக இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips