Social Icons

Sunday, May 31, 2015

மாரடைப்பு, புற்றுநோயை வரும்முன் அறியும் நவீன கருவி கண்டுபிடிப்பு இதோ!

தொகுப்பு: MJM Razan
இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்தில் இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது. உடலில் மாரடைப்பு, நீரிழிவு மற்றும் புற்றுநோயை வரும் முன் அறிந்து கொள்ளும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியை சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


14 மில்லிமீட்டர் நீளம் கொண்ட இந்த ‘சிப்’பை தோலின் உள்புறத்தில் ஒரு சென்டிமீட்டர் ஆழத்தில் வைத்து தைத்துவிட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாகவே இது தொடர்பான எச்சரிக்கையை நமக்கு அளித்துவிடும்.

இந்த சிப்புடன் இணைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சாதனத்தின் உதவியுடன் இந்த தகவல் ப்ளூடூத் வாயிலாக நமது குடும்ப வைத்தியரின் தொலைபேசி அல்லது கணனிக்கு உடனடியாக சென்று சேர்ந்து விடும்.

ஒருநொடி தவறாமல் நமது ரத்த சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை வெகு துல்லியமாக பதிவு செய்யும் இந்த நவீன கருவி, ரத்தத்தில் சுரக்கும் அமிலம் மற்றும் ரத்தத்தின் வெப்பத்தை தொடர்ந்து அளவீடு செய்கின்றது.

வைத்தியர்கள் அவ்வப்போது ரத்தப் பரிசோதனையின் மூலம் தேடி கண்டுபிடிக்கும் ரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பையும் இது மிகவும் நுணுக்கமாக மதிப்பிட்டு விடுவதால், அடிக்கடி பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்லும் செலவும், நேரமும் மிச்சமாகும்.

மாரடைப்பு மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இந்த நவீன கருவி உறுதுணையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips