Social Icons

Wednesday, April 1, 2015

ஆண்ட்ராய்டு யூசர்களுக்காக புதிய மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் அப்ளிக்கேஷன் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு சாதன வாடிக்கையாளர்களுக்காக மொபைல் ஜிமெயில் அப்ளிக்கேஷனை மேம்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு சிங்கிள் ப்ரோகிராமில் இருந்து பல மின்னஞ்சல் கணக்குகளை நிர்வகிப்பதற்காக இந்த மொபைல் ஜிமெயில் அப்ளிக்கேஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இன்று முதல் தொடங்கும் இந்த வசதியில், உங்கள் கணக்கு எதுவாக இருந்தாலும் அதிலிருந்தே உங்கள் அனைத்தை மின்னஞ்சல் கணக்குகளையும் புதிய 'ஆல் இன்பாக்ஸ்சஸ்' விருப்பத்தை பயன்படுத்தி பார்வையிட முடியும் என்று கூகுளின் மென்பொருள் பொறியாளர் ரெஜிஸ் டிகாம்ப்ஸ், ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளார். 
இந்த அப்ளிக்கேஷன் மூலம், உங்கள் கணக்குகளுக்கு இடையில் ஹாப் இல்லாமல் மின்னஞ்சல் செய்திகளை படிக்கவும், பதிலளிக்கவும் முடியும். யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் அவுட்லுக் போன்ற போட்டி சேவைகளின் மின்னஞ்சல்களை ஒன்றாக்கும் பொருட்டு இந்த புதிய பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து பல கணக்குகளை அணுக ஜிமெயில் அனுமதிக்கிறது. ஆனால் இந்த புதிய பயன்பாட்டில் தேடல் மற்றும் முன்னோட்ட திறன் கொண்ட ஒரு ஒன்றுபட்ட இன்பாக்ஸில் பல்வேறு மின்னஞ்சல் சேவைகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது.



No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips