Social Icons

Monday, March 9, 2015

விளையாட்டில் மூளையை பயன்படுத்தி திரையில் உள்ள பொருட்களை கட்டுப்படுத்த புதிய ஹெட்செட் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
சமீப காலமாக விர்சுவல் ரியாலிட்டி வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஒரு நிறுவனம், விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டின் அடுத்த கட்டத்தை உருவாக்கியுள்ளது. அதாவது, நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்தி திரையில் தோன்றும் பொருட்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஹெட்செட்டை தயாரித்துள்ளனர். எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிறுவனம் (IEEE) மற்றும் ஆஸ்திரேலிய சார்ந்த Emotiv கூட்டாக இணைந்து இந்த ஹெட்செட்டை உருவாக்கியுள்ளனர். 


இதை உபயோகப்படுத்துபவர் Emotivன் எலக்ட்ரோ எக்ஸ்ரே கொண்டு மூளையைப் படம் எடுக்கும் (EEG) ஹெட்செட்டை அணிந்து கொள்ள வேண்டும். இந்த சாதனம் அவர்களின் தனிப்பட்ட மூளை வடிவங்களை படிக்க பயிற்றுவிக்கப்பட்டது. முதல் படியாக ஹெட்செட் அணிந்திருப்பரின் 'நியூட்ரல்' நிலையை கற்றுக்கொள்ள பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும், இது அவர்களின் மூளை தீர்வுகளை  உள்ளடக்கியது. பின்னர் அவர்கள் கார் ஓட்டுவது தொடர்புடைய பணியை பற்றி மீண்டும் மீண்டும் நினைக்க கேட்கப்படுகிறது. இது ஓட்டுவது தொடர்புடையதாக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, இது அணிந்திருப்பவர் தொடர்ந்து யோசிப்பதற்காகவும் மற்றும் மீண்டும் முயற்சிப்பதற்காகவும் இருக்கும். 

இந்த ஹெட்செட் பயிற்றுவிக்கப்பட்டதும் விளையாட்டு தொடங்கும், அணிந்திருப்பவரின் தனிப்பட்ட மூளை வடிவங்களை அங்கீகரித்து திரையில் உள்ள காரின் சக்கரத்தை ஓட்ட வைக்கும். மேலும், அணிந்திருப்பவர் கார் ஓட்டுவது தொடர்புடைய பணியை பற்றி மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும், அப்போது தான் விளையாட்டில் கார் நகரும். EPOC Emotiv ஹெட்செட் $499 (£324) விலையில் கிடைக்கும். இது EEG அளவீடுகளை வைத்து ஏற்கனவே உள்ள மூளை கணினி இடைமுகம் விளையாட்டுகள் மற்றும் மென்பொருள் உடன் வேலை செய்யும்.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips