ஸ்மார்ட் போன் என்றாலே ஆன்டிராய்டு என்ற
அளவுக்கு இந்த
இயங்குதளம் பிரபலமாகிவிட்டது.
இதில் ஏராளமான
‘மொபைல் அப்’கள் இலவசமாகவே
கிடைக்கின்றன என்பது முக்கிய காரணம். இது
விண்டோஸ் இயங்குதள
மொபைல்களை பின்னுக்கு
தள்ளிவிட்டது. விண்டோசில் கடந்த நவம்பர் வரை 1.9 லட்சம்
அப்களே உருவாக்கப்பட்ட
நிலையில், ஆண்டிராய்டு
அப்ளிகேஷன் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்த குறையை போக்க விண்டோஸ் நிறுவனம்
முயற்சி மேற்கொண்டு
வருகிறது.
தனது விண்டோஸ்
10 இயங்குதள மொபைல்களில் ஆன்டிராய்டு
அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து
பயன்படுத்துவதற்கான வழிவகைகளை விண்டோஸ்
நிறுவனம் ஆராய்ந்து
வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment