Social Icons

Thursday, March 5, 2015

கிரிபத்&சம்பல்

தொகுப்பு: MJM Razan
தேவையான பொருட்கள்;-
அரிசி (வெள்ளைப்பச்சரிசி, சம்பா, பொன்னி etc) – 1 கப்
தேங்காய் முதற்பால் – 1கப்
உப்பு
தண்ணீர்

செய்முறை;-
•அரிசியை களைந்து பாத்திரத்தில் போட்டு மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி அவிய விடவும்.


•தண்ணீர் வற்றி அரிசி நன்கு அவிந்ததும் தேங்காய்பால் உப்பு சேர்த்து கிளறி மீண்டும் அவிய விடவும்.

•பால் வற்றி இறுக்கமானதும் ஒரு பட்டர் தடவிய தட்டில் கொட்டி வாழை இலை அல்லது பட்டர் பூசிய தாளால் அழுத்தி பரவி விடவும்.

•ஓரளவு ஆறியதும் டைமன்ட் வடிவில் வெட்டவும். (பொதுவாக அவர்கள் இப்படிதான் வெட்டுவார்கள். ஏனென்று
தெரியவில்லை)

•சுவையான கிரிபத் தயார். இதனை கட்டை சம்பல்/சீனிச்சம்பல்/குழம்புடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


Note:

கடைகளில் கிடைக்கும் உடனடி தேங்காய்பாலும் (canned coconut milk)பாவிக்கலாம். இதில் கிரிபத் படம் பார்க்கலாம்.







No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips