Social Icons

Thursday, February 12, 2015

முதல் முறையாக 10 பில்லியன் டாலரைக் கடந்தது பேஸ்புக்கின் ஆண்டு வருமானம்

தொகுப்பு: MJM Razan
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக லாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய பேஸ்புக், அதன்மூலம் 696 மில்லியன் டாலரை லாபமாக பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதுமான பேஸ்புக்கின் வருமானம் 58 சதவீதம் உயர்ந்து 12.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால் அதன் லாபம் 2.9 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு இருமடங்காக உயர்ந்துள்ளது.


இது குறித்து பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில் “எங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வம் இருந்தால், நாங்கள் அமெரிக்க மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களின் விளம்பரங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியிருப்போம். ஆனால் அதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக நாங்கள் இங்கு இல்லை” என்று தெரிவித்தார்.





No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips