Xolo நிறுவனம் புத்தாண்டு வெளியீடாக தனது புதிய Xolo Q700 கிளப் ஸ்மார்ட்போனை தனது வளைத்தளத்தில் ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xolo Q700 கிளப் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனினும், வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Xolo Q700 கிளப் ஸ்மார்ட்போனின் ஒரு சிறப்பம்சமாக முன்புறம் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் இதில் முன் நிறுவப்பட்ட ஹங்காமா மியூசிக் அப்ளிக்கேஷனுடன் வருகிறது, இதில் 3 மாதங்களுக்கு இலவசமாக வரையறையற்ற இசை மற்றும் வீடியோ பதிவிறக்கங்கள் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனி மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, தூசி மற்றும் நீரில் இருந்து பாதுகாக்கப்படும் IP55 சான்றிதழுடன் வருகிறது.
இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) கொண்ட Xolo Q700 கிளப் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இதில் 218ppi பிக்சல் பிக்சல் அடர்த்தி உடன் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஸ்மார்ட்போனில் ரேம் 1GB மற்றும் மாலி-400 MP2 ஜிபீயூ உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6582M) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
Xolo Q700 கிளப் ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இதில் எல்ஈடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
Xolo Q700 கிளப் பின்புற கேமராவின் அம்சங்களான, சீன் டேடேக்ஷியன், ஃபேஷ் ரெகக்னைசேஷன், பனோரமா, ஜியோ டாக்கிங், டெஸ்ட் ஷாட், ஷாட் ஸ்மைல் மற்றும் HDR விருப்பங்களை கொண்டுள்ளது. ப்ரோசிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை வழங்குகிறது.
Xolo Q700 கிளப் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஏ-ஜிபிஎஸ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் போன்ற விருப்பங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இது 134.6x67x10.8mm நடவடிக்கைகள் மற்றும் கருப்பு வண்ணத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
Xolo Q700 கிளப் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
இரட்டை சிம்,
480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
ரேம் 1GB,
1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6582M) ப்ராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
எல்ஈடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
3ஜி,
ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
ஏ-ஜிபிஎஸ்,
Wi-Fi 802.11 b/g/n,
மைக்ரோ-யுஎஸ்பி,
ப்ளூடூத்,
ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
2000mAh பேட்டரி.
No comments:
Post a Comment