Social Icons

Saturday, January 3, 2015

கணினியின் ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் இலவச மென்பொருள்

தொகுப்பு: MJM Razan
அதிக நேரம் நீங்கள் கணினி முன் வேலை செய்பவரா ? அப்படியாயின் கடினமாக உழைப்பது நீங்கள் அல்ல. உங்கள் கண்கள் தான்.

இன்று உலகமே கணனி மயப்படுத்தப்பட்டு விட்டதால் கணனியின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் காணமுடிகின்றது.

எனவே கணினியானது இன்றைய உலகத்தில் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இன்றியமையாத ஒரு சாதனமாக இருந்தாலும் அதன் மூலம் இன்னல்களையும் சந்திக்கவேண்டிய  நிலைமையானது வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வருகின்றது.


அந்தவகையில் நாம் கணணியை தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் அதிலிருந்து எமது கண்களை நேரடியாக வந்தடையும் கதிர்வீச்சுக்களானது சிறிது நேரத்திலேயே எமது கண்களை களைப்படைய செய்து விடுகின்றது. இதனால் நாம் சந்திக்கும் இன்னல்களோ ஏராளம்.

இவ்வாறான பாதிப்புக்கள் சூரிய வெளிச்சத்தின் காரணமாக பகல் நேரங்களில் குறைவாக இருந்தாலும் இரவு நேரங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. சில வேளைகளில் அது நமது தூக்கத்தினை பாதிக்கும் ஒரு அம்சமாகவும் அமைதுவிடுவதுண்டு.

இருந்தாலும் பிரச்சனை என ஒன்றிருக்கும் போது, தீர்வு என ஒன்று இருக்காமலா இருந்துவிடப்போகின்றது. இதற்கெல்லாம் தீர்வை தருகின்றது f.lux எனும் Windows கணினிக்கான இலவச மென்பொருள்.

வெறும் 1MB -க்கும் குறைவான அளவையே கொண்டுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்துவது மிகவும் இலகுவானது.

இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிய பின் இது, உங்கள் Task Bar இல் வந்தமர்ந்து கொள்ளும் பின் அதனை சுட்டுவதன் மூலம் உங்களுக்குத் தேவையான விதத்தில் அதன் அமைப்புக்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளானது கணனியின் திரையில் இருந்து வெளிப்படும் ஒளியினை பகல் நேரத்தில் சாதாரணமாகவும் இரவு நேரங்களில் கணினியில் இருந்து வெளிப்படும் ஒளியினை தானகவே கட்டுப்படுத்தித் தரும் வசதியினையும் கொண்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட மென்பொருளில் Settings ===> Set Your Location எனும் பகுதிக்கு சென்று நீங்கள் வசிக்கும் இடத்தினை அல்லது அந்த இடத்திற்கான Zip code இனை வழங்குவதன் மூலம் அது தானாகவே பகல்/ இரவு நேரங்களை கணித்துக்கொள்ளும்.

மேலும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளை உங்கள் கணனிக்கோ அல்லது iPhone/iPad சாதனத்துக்கோ நிறுவிக்கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க.

                              https://justgetflux.com/

இது தவிர இந்த மென்பொருளின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Disable for one hour என்பதை சுட்டுவதன் மூலம் இதன் செயற்பாட்டை ஒரு மணி நேரத்திற்கு முடக்கி வைத்துக் கொள்ளவும் முடியும்.




No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips