தொகுப்பு: MJM Razan
முதல் முறையாக இரண்டு கைகளை இழந்தவர்களுக்காக புதிதாக மூளை கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு கைகளை சோதனை செய்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின் விபத்தில் இரு கைகள் இழந்த லெஸ் பாக் என்பவருக்கு இந்த கருவி பொருத்தப்பட்டது. இந்த கருவியை அணிவதன் மூலம் தான் நினைப்பதற்கேற்ப சாதாரணமாக தனது கை உறுப்புக்களை நகர்த்த முடியும். அவரது தசைகளின் பயிற்சிக்கு பின்னர், அவரால் கப்பை தூக்க முடிந்தது மற்றும் இரண்டு கைகளிலும் பல்வேறு இயக்கங்களை செயல்படுத்தவும் முடிந்தது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரயோக இயற்பியல் ஆய்வகத்தில் (Applied Physics Laboratory) இரண்டு கைகளை இழந்த மனிதர், முதல் முறையாக மூளை கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு கைகளை தோள்பட்டை நிலையில் அணிந்து வரலாறு படைத்துள்ளார். கை மற்றும் கை விரல்கள் கட்டுப்பாட்டில் இயங்க உடலின் நரம்புகள் மாற்றி அமைக்கப்படுகிறது, இந்த அமைப்பு அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் காய சர்ஜன் ஆல்பர்ட் சி, MD, விளக்கியுள்ளார். தோள்பட்டை வரை கைகளை இழந்தவர்கள், ஏற்கனவே உள்ள நரம்புகளை மாற்றி அமைப்பதன் மூலம் செயற்கை சாதனங்களை கட்டுப்படுத்தி நாம் நினைத்ததற்கேற்ப கைகளை செயலாக்க முடியும்.
Read:
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=123324
No comments:
Post a Comment