Social Icons

Saturday, December 27, 2014

64 பிட் SoC கொண்ட ஆசஸ் பெகாசஸ் X002 ஸ்மார்ட்போன் அறிமுகம் கருத்துகள்

தொகுப்பு: MJM Razan
செவ்வாய்கிழமை அன்று ஆசஸ் நிறுவனம் சீனாவில் ஆசஸ் பெகாசஸ் X002 என்ற 64 பிட் 4G LTE ஸ்மார்ட்போனை CNY 799 (சுமார் ரூ. 8,000) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

டூயல் சிம் (4ஜி+ 2ஜி) கொண்ட ஆசஸ் பெகாசஸ் X002 ஸ்மார்ட்போன் ZenUI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஆசஸ் பெகாசஸ் X002 ஸ்மார்ட்போனில் 2GB ரேம் உடன் இணைந்து 64-பிட் 1.5GHz குவாட் கோர் மீடியாடெக் MT6732 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் LED ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, உள்ளது. இதில் microSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. 


ஆசஸ் பெகாசஸ் X002 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 4G TD-LTE, Wi-Fi, Wi-Fi டைரக்ட், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், A2DP இணைந்த புளுடூத் 4.0, ஜிஎஸ்எம், மற்றும் மைக்ரோ -யுஎஸ்பி உள்ளிட்டவை அடங்கும். இதில் 2500mAh லி-போ பேட்டரி திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிகப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் தங்கம் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். மேலும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது. 

ஆசஸ் பெகாசஸ் X002 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

டூயல் சிம்,
720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே,
2GB ரேம்,
1.5GHz குவாட் கோர் மீடியாடெக் MT6732 பிராசசர்,
8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
microSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
4G TD-LTE,
Wi-Fi,
Wi-Fi டைரக்ட்,
ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ்,
A2DP இணைந்த புளுடூத் 4.0,
ஜிஎஸ்எம்,
மைக்ரோ -யுஎஸ்பி,
ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
2500mAh லி-போ பேட்டரி.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips