தொகுப்பு: MJM Razan
இந்தியாவில் கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போன் விலை உத்தியோகபூர்வமாக
உறுதி செய்யப்பட்டது என்றுப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது. கூகுள்
நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போன் 32GB வகை இந்தியாவில் ரூ.44,000 விலையில்
கிடைக்கும். மற்றும் கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போன் 64GB வகை இந்தியாவில்
ரூ.49,000 விலையில் கிடைக்கும்.
கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் 32GB $ 649 (சுமார் ரூ. 40,000) விலையிலும் மற்றும் 64GB வகை $ 699 (சுமார் ரூ. 43,000) விலையிலும் கிடைக்கிறது. மிட்நைட் ப்ளூ மற்றும் கிளவுட் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் ஸ்மார்ட்போன் கிடைக்கும். ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான விலை தற்போது ப்ளே ஸ்டோரில் மட்டுமே வெளியாகியுள்ளது, அதிகாரபூர்வ வெளியீட்டு அடுத்த பதினைந்து நாட்களுக்குள் நடக்கும். கீறல் எதிர்ப்பு கிளாஸ் (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3) கொண்டுள்ளது.
கூகுள் நெக்ஸஸ் 6, ஸ்மார்ட்போன் மோட்டோரோலா மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது, இதில் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.96 இன்ச் QHD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது மற்றும் 493PPI வருகிறது. ஸ்மார்ட்போனில் ரேம் 3GB உடன் இணைந்து ஒரு 2.7GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 805 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டபடி, கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போனில் 32GB மற்றும் 64GB உள்ளடங்கிய சேமிப்பு விருப்பங்களை கொண்டு வருகிறது.
ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வருகிறது. கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போனில், ஆண்ட்ராய்டின் மிக சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குகிறது. நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போனில், 184 கிராம் எடையுடையது, 3220mAh பேட்டரி உள்ளது மற்றும் 82,98 x 159.26 x 10.06mm அளவிடுகிறது. ஸ்மார்ட்போனில், ப்ளூடூத் 4.1, Wi-Fi, 802.11 a b/g/n மைக்ரோ USB, NFC, ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் / எட்ஜ் போன்ற இணைப்பு விருப்புங்களுடன் வருகிறது. மேலும், அச்செலேரோமீட்டர், கய்ரோஸ்கோப், காம்பஸ், பாரோமீட்டர் போன்ற சென்சார்களுடன் வருகிறது.
கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
- 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.96 இன்ச் QHD டிஸ்ப்ளே,
- ரேம் 3GB,
- 2.7GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 805 ப்ராசசர்,
- 32GB மற்றும் 64GB உள்ளடங்கிய சேமிப்பு,
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ப்ளூடூத் 4.1,
- Wi-Fi 802.11 a b/g/n,
- மைக்ரோ USB,
- NFC,
- ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ்,
- ஜிபிஆர்எஸ் / எட்ஜ்,
- ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
- 3220mAh பேட்டரி,
- 184 கிராம் எடை.
No comments:
Post a Comment