Social Icons

Wednesday, November 12, 2014

நோக்கியா பெயர் நீக்கப்பட்ட மைக்ரோசாஃப்டின் முதல் லூமியா 535 ஸ்மார்ட்போன் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, நோக்கியா என்ற பெயர் நீக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான லூமியா 535 ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் புதிய லூமியா ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கிறது - ஒற்றை சிம் (அதே பெயரில்) மற்றும் இரட்டை சிம், லூமியா 535 டியூவல் சிம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் 110 யூரோக்கள் (தோராயமாக ரூ 8,400) (வரி மற்றும் மானியங்கள் நீங்கப்பட்ட) விலையில் மதிப்பிடப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் லூமியா 535, சீனா, ஹாங்காங் மற்றும் வங்காளம் போன்ற நாடுகளில் முதலில் கிடைக்கும். லூமியா 535 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலை மற்றும் வெளியீடு தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.


'இன்று, எங்கள் புதிய மைக்ரோசாஃப்ட் லூமியா 535 வெளியீடு காண்கிறது, ஸ்மார்ட்போன் '5x5x5 ' தொகுப்பில், 5 இன்ச் டிஸ்ப்ளே, 5 மெகாபிக்சல் முன் மற்றும் பின் எதிர்கொள்ளும் கேமரா, மற்றும் இலவச ஒருங்கிணைந்த மைக்ரோசாஃப்ட் அனுபவங்கள் (அதாவது ஸ்கைப் மற்றும் OneNote போன்றவை) ஒரு மலிவு விலையில் மக்களுக்கு வழங்க உள்ளது' என்று லூமியா உரையாடல்கள் வலைப்பதிவு வழியாக மைக்ரோசாஃப்ட் செய்தி அறிவித்துள்ளது.

பிந்தைய அம்சங்களான இரட்டை சிம் ஆதரவு தவிர, மைக்ரோசாஃப்ட் லூமியா 535 மற்றும் லூமியா 535 டியூவல் சிம் ஸ்மார்ட்போன் இரண்டும் ஒரே மாதிரியாக குறிப்புகளில் வருகிறது.

லூமியா ஸ்மார்ட்போன் டெனிம் மேம்படுத்தல் கொண்ட விண்டோஸ் போன் 8.1 இயங்குகிறது மற்றும் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. மற்றும் 220ppi ஒரு பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது. இதில் பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளது. லூமியா 535 ஸ்மார்ட்போனில் ரேம் 1GB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது. மற்ற லூமியா கைபேசிகள் போலவே, லூமியா 535 மற்றும் லூமியா 535 டியூவல் சிம் ஸ்மார்ட்போனிலும் இலவச OneDrive கிளவுட் சேமிப்பு 15GB கிடைக்கும். லூமியா 535 ஸ்மார்ட்போனில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட (1/4 இன்ச் சென்சார், f / 2.4 துளை மற்றும் 28mm ஃபோகல் லெங்க்த்)  5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்ஃபி ரசிகர்களுக்காக 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் 848x480p தீர்மானம் வீடியோ படம்பிடிக்க முடியும்.

மற்ற லூமியா கைபேசிகள் போலவே மைக்ரோசாப்ட் லூமியா 535 ஸ்மார்ட்போனில், சியான், பிரைட் கிரீன், பிரைட் ஆரஞ்சு, ஒயிட், டார்க் கிரே, மற்றும் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இணைப்பை பொறுத்தவரை, தொலைபேசியில் 3G, Wi-Fi, ப்ளூடூத் 4.0 மற்றும் எ-ஜிபிஎஸ் வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 1905mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:



  • ஒற்றை சிம்,
  • 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே,
  • microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 பிராசசர்,
  • ரேம் 1GB,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3G,
  • Wi-Fi,
  • ப்ளூடூத் 4.0,
  • எ-ஜிபிஎஸ்,
  • விண்டோஸ் போன் 8.1,
  • 1905mAh பேட்டரி.

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 டியூவல் சிம் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
  • டியூவல் சிம்,
  • 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே,
  • microSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 பிராசசர்,
  • ரேம் 1GB,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3G,
  • Wi-Fi,
  • ப்ளூடூத் 4.0,
  • எ-ஜிபிஎஸ்,
  • விண்டோஸ் போன் 8.1,
  • 1905mAh பேட்டரி.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips