ஒரு முறை பிரிண்ட் செய்த பின் அத்தாள்களை (Papers) மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும் அவ்வாறு மீண்டும் 20 முறைகள் வரை மீள் பதிப்பு செய்து பயன்படுத்தக்கூடிய தாளினை கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை அவற்றில் மீண்டும் பதிப்பு செய்வதற்கு மேலதிக மை (Ink) தேவை இல்லை என்பதும் விசேட அம்சமாகும்.
இத்தாள்களில் பிரிண்ட் செய்யும் போது எழுத்துக்கள், படங்கள் எதுவும் உடனடியாக தென்படாது. வளியில் உள்ள ஒட்சிசனுடன் தாக்கமடைந்த பின்னரே எழுத்துக்கள், படங்கள் தென்பட ஆரம்பிக்கும்.
மேலும் இத்தாள்களை வெப்பப்படுத்துவதன் ஊடாக அழித்தலை வேகப்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதற்கு 10 நிமிடங்கள் வரை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, December 14, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment