உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் எபோலா வைரஸ், தற்போது கணனியையும் தாக்கி வருகின்றது.
அதாவது, எபோலா வைரஸ் பற்றிய போலியான தகவல்கள், இமெயில்கள் மூலம் உலகெங்கும் வலம் வருகின்றன.
அத் தகவலில், எபோலா பற்றி உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது, இதை அவசியம் படியுங்கள், மற்றவர்களுக்கும் பரப்புங்கள் என்ற எச்சரிக்கை செய்தி தரப்பட்டுள்ளது.
மேலும் அது குறித்த படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது, இதனை கிளிக் செய்தால் உடனே மால்வேர் ஒன்று உங்கள் கணனியை பாதித்து அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது.
அதில் உங்கள் கணனியின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன.
எனவே இதுபோன்ற தகவல்கள் வந்தால் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
Sunday, December 14, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment