இணையத்தளப் பாவனையின் போது பல்வேறு இடங்களில் அதனைப் பயன்படுத்துபவர் ரோபோ அல்லது வைரஸ் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதற்காக Captcha தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதாவது படம் ஒன்றில் தரப்பட்டுள்ள இலக்கங்கள், எழுத்துக்களை அதே போன்று தட்டச்சு செய்யவேண்டும்.
கூகுள் நிறுவனம் தற்போது இத்தொழில்நுட்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றது.
இதற்காக வினாக்களுக்கு விடையளித்தல் உட்பட சுட்டியின் (Mouse) பயன்படுத்தும் வேகத்தை கணித்தல், கிளிக் செய்யும் துல்லியத்தை மதிப்பிடல் என்பனவற்றுடன் கணனியின் ஐக முகவரிகள் தொடர்பான தகவல்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
Sunday, December 14, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment