தொகுப்பு: MJM Razan
ஒரு 'சூப்பர் ஸ்மார்ட்' என்ற செயற்கையான ஸ்கினை ஆராய்ச்சியாளர்கள்
அறிமுகப்படுத்தியுள்ளனர், இதன் மூலம் கை இழந்தவர்களுக்கு மீண்டும் தொடும்
உணர்வை கொடுக்க முடியும். அவற்றின் தோல், மனித தோல் போன்று இருக்கும்
என்றும் தென்கொரியா ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையான
தோல் போன்று நீட்டமுடியும் மற்றும் இதில் உள்ளமைக்கப்பட்ட ஹீட்டர் உள்ளதால்
கையில் திசு உணர்வுடன் இருப்பது போன்ற உணர்வையும் கொடுக்கும்.
இது
அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தினையும் உணர முடியும். மேலும்,
ஆராய்ச்சியாளர்கள் செயற்கை கையில் செயற்கை தோல் பயன்படுத்தி சோதனை செய்து
பார்த்தனர். அப்போது இந்த சூப்பர் ஸ்மார்ட்டை அணிந்தால் டைப்பர் ஈரமானதா
அல்லது உலர்ந்ததா என்பதை கூட உணர முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
'செயற்கை
கை மற்றும் லேமினேட் செய்யப்பட்டுள்ள மின்னணு தோல் அணிவதன் மூலம் பல
சிக்கலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியும். அதாவது, கை குலுக்கல்,
விசைப்பலகை தட்டுதல், பந்து பிடித்துக்கொள்ளுதல், சூடான அல்லது குளிர்ந்த
பானம் உள்ள கப்பை செயற்கையில் கையில் வைத்திருக்கலாம், உலர்ந்த அல்லது
ஈரமான மேற்பரப்புகளை தொட்டு உணரலாம் மற்றும் மனிதன் மனிதனை தொடர்பு
கொள்ளலாம் போன்ற நடவடிக்கைகளை செ¢யயலாம்' என்று இயற்கை கம்யூனிகேஷன்ஸ்
வெளியிடப்பட்ட பேப்பரில் எழுதி இருந்தது.
பாலிடைமெதில்சிலாக்சைன்(polydimethylsiloxane)
அல்லது PDMS -என்று அழைக்கப்படும் இந்த தோல் வளைந்து கொடுக்கவும்,
ஊடுருவக்கூடிய சிலிகான் பொருள் ஆகியவை ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் குழு உண்மையான தோலை போன்று செயற்கையான தோலிலும் சூடான
உணர்வு இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
'செயற்கையான
சாதனங்கள் மற்றும் செயற்கையான தோல் இயற்கையாக உள்ளது போல் உணர வேண்டும்,
மேலும் அவற்றின் வெப்பத்தின் அளவு மனித உடலுக்கு பொருந்தும்
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணினார்கள்.
இந்த செயற்கை தோல் ஃபாரன்ஹீட் ஒரு நிலையான 98 டிகிரி பராமரித்து வருகிறதா,
இல்லையா என்பதை சோதிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள்
நினைத்தார்கள்.
பின்பு கையின் மீது பிளாஸ்டிக் குழந்தை பொம்மை
வைத்து, பின்பு அந்த பொம்மையை இடம்மாற்றி வெப்பத்தின் அளவை அளவிட்டனர்.
சிலிக்கான் நானோரிப்பன் வடிவங்களின் வடிவத்தை சரிசெய்வதன் மூலம், தோல்
நீட்டுவதை சரிசெய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த
செய்கையான கை உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஊனமுற்றவர்களுக்கு ஆதரவாக இருக்க
வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு இழந்த உணர்வை மீண்டும்
தருவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment