Social Icons

Thursday, December 11, 2014

கூகுள் குரோம்காஸ்ட் இந்தியாவில் ரூ.2,999 விலையில் தற்போது கிடைக்கும்

தொகுப்பு: MJM Razan

ஹச்டிஎம்ஐ போர்ட் மூலம் எல்சிடி/எல்இடி/எச்டி டிவியை இணைக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கூகுள் குரோம்காஸ்ட் மீடியா ஸ்ட்ரீமிங் சாதனம் ரூ.2,999 விலையில் இந்தியாவில் தற்போது கிடைக்கிறது. யூசர்கள் தங்களின் போன்கள், டேப்லட்கள் அல்லது மடிக்கணினிகளில் இருக்கும் ஸ்ட்ரீமிங் கன்டன்ட்டை (ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோ அல்லது ஆடியோ ஃபைல்களை) தொலைக்காட்சியில் பார்க்க முடியும். டிசம்பர் 10ம் தேதி மிட்நைட் முதல் இந்த குரோம்காஸ்ட் டாங்கிள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது இ-காமர்ஸ் இணையதளமான ஸ்னாப்டீல்.காம் இல் இருந்து பிரத்யேகமாக கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த சாதனம் $35 (ரூ.2,165 தோராயமாக) விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. இது யூசர்கள் ஹுலு, நெட்ஃபிக்ஸ் மற்றும் கூகிள் யூடியூப் போன்ற வீடியோ சேவைகள் மற்றும் கூகுள் ப்ளே வில் இருந்து கன்டன்ட் போன்றவற்றை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டதை தொலைக்காட்சியில் பார்க்க அனுமதிக்கின்றது. மேலும், நெட்ஃபிக்ஸ் மற்றும் ஹுலு போன்ற அமெரிக்க சேவைகள் இந்தியாவில் இல்லை என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. குரோம்காஸ்ட், இந்தியாவில் தற்போது யூடியூப் மற்றும் கூகுள் ப்ளே மூவிஸ் போன்றவற்றை ஆதரிக்கிறது, அத்துடன் ஈரோஸ் நவ் Spuul மற்றும் YuppTV போன்ற கூட்டாளிகளிடமிருந்து அப்ளிக்கேஷனையும் ஆதரிக்கின்றது. 

கூகுள் இந்தியா நிறுவனம் குரோம்காஸ்ட்டை இந்தியாவிற்கு கொண்டு வர ஏர்டெல் மற்றும் ஸ்னாப்டீல்.காம் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது என்று கூகுள் இந்தியாவின் வி.பி. மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜன் ஆனந்தன், டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் சலுகையாக ஏர்டெல் மற்றும் ஈரோஸ் நவ் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து குரோம்காஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பான சந்தா சலுகைகள் வழங்குகிறது. 

ஈரோஸ் நவ் குரோம்காஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தங்களது முழு அட்டவணை கன்டன்ட்டை இலவசமாக அணுகும் சலுகையை வழங்குகிறது. இதில் பிரபலமான பாலிவுட் மற்றும் அதன் வட்டார திரைப்படங்கள், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அடங்கும். ஏற்கனவே ஏர்டெல் வாடிக்கையாளராக இருக்கும் குரோம்காஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 20ஜிபி டேடாவை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மேலும் புதிய ஏர்டெல் வாடிக்கையாளராக இருக்கும் குரோம்காஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 ஆக்டிவேஷன் சார்ஜசை அகற்றிவிடும்.  

2இன்ச் கொண்ட குரோம்காஸ்ட் சாதனத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன், டேப்லட், மடிக்கணினி மற்றும் பிசி யில் இணைத்து ஆன்லைனில் ஃபைல்களை டவுன்லோட் செய்து ஆப்பிள் டிவியை தவிர மற்ற டிவியில் பார்க்க முடியும். 

இந்திய சந்தையில் குரோம்காஸ்ட் தொடங்க, டிசம்பர் 10-12ம் தேதி நடைபெறும் கிரேட் ஆன்லைன் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியை (GODF) நிறுவனம் தேர்வு செய்துள்ளது. 

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips