தொகுப்பு: MJM Razan
ஏசர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை, அதன் சமீபத்தில் தொடங்கப்பட்ட லிக்விட் ஜேட் ஸ்மார்ட்போனின் புத்தம் புதிய வெர்ஷனான ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை TWD 6,990 (சுமார் ரூ. 13,800) ஆகும். இந்த லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போன் தைவானில் டிசம்பர் 18ம் தேதி முதல் விற்பனைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனத்தின் இந்திய விளைதளத்தில் சாதனத்தை பட்டியலிட்டுள்ளது. எனினும், நிறுவனம் ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போனின் விலை பற்றி அறிவிக்கப்படவில்லை.
டூயல் சிம் கொண்ட ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே உடன் 'ஜீரோ ஏர் கேப்' தொழில்நுட்பம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 திரை பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போன் சிப்செட், முன் எதிர்கொள்ளும் கேமரா, பேட்டரி மற்றும் 4ஜி எல்டிஇ இணைப்பு போன்றவை லிக்விட் ஜேட் ஸ்மார்ட்போன் போன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக குறிப்புகளை கொண்டுள்ளது.
இந்த லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் முதல் 64 பிட் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் அக்டா கோர் 1.5GHz மீடியா க்ஷடெக் MT6752M பிராசசர் மூலம் இயங்குகிறது. அதேசமயம் உண்மையான லிக்விட் ஜேட் ஸ்மார்ட்போனில் குவாட் கோர் 1.3GHz மீடியாடெக் MT6582 பிராசசர் இடம்பெற்றிருந்தது என்று குறிப்பிட்டிருந்தது. இதில் 16-கோர் மாலி T760 மற்றும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போனில் மைக்ரோ SD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு (அறியப்படாத அதிகபட்ச கொள்ளளவு) வருகிறது-.
லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் அடிப்படையில், 4ஜி எல்டிஇ, Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்குகிறது. லிக்விட் ஜேட் ஸ்மார்ட்போன் பரிமாணங்கள் 143x69x7.78mm மற்றும் 116 கிராம் எடையுடையது. இதில் 2300mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.
ஏசர் லிக்விட் ஜேட் எஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:
டூயல் சிம்,
20x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
64 பிட் அக்டா கோர் 1.5GHz மீடியா க்ஷடெக் MT6752M பிராசசர்,
2ஜிபி ரேம்,
மைக்ரோ SD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
4ஜி எல்டிஇ,
Wi-Fi,
ப்ளூடூத்,
மைக்ரோ யூஎஸ்பி,
ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,
ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
2300mAh பேட்டரி,
116 கிராம் எடை.
No comments:
Post a Comment