தொகுப்பு : ALM.SAFRAS
வெற்றிக்காக எதையும் செய்யத் துணிந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு சிலர் தங்களைத்தானே வருத்திக் கொண்டு வெற்றியினை அடைவார்கள், ஆனால் ஒரு சிலர் மற்றவர்களை வருத்தி வெற்றியடைவார்கள். இவ்வாறு இருக்கையில், சில வெற்றியாளர்கள் மட்டும் சரியான வழியில் எளிதாக
1. மதிப்பிடுதல்: நான் இன்று செய்த உருப்படியான செயல் என்ன?
“ஒவ்வொரு நாளிலும் நாம் நம் கடமையினை செய்தோம் என்றால் அதில் எத்தனை சதவீதம் நம் வளர்ச்சிக்கு உதவும்படிச் செய்துள்ளோம்” என்று நம்மை நாமே மதிப்பிட வேண்டும். ஒவ்வொரு நாள் முடிவிலும் இதுபோன்ற மூன்று கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
- எனது கனவினை அல்லது இலக்கினை நோக்கிய இந்தப் பயணத்தில், அதையடைய இன்று நான் என்ன செய்தேன்?
- இந்த நாளில் நான் செய்த இந்த செயலுக்காக எனக்கு நானே நன்றி தெரிவித்துக்கொள்ள வேண்டும், என்று எண்ணும் செயல் எது?
- இன்று நான் கற்றுக்கொண்டதில் இருந்து எப்படி முன்னேற முடியும்?
2. நாளைக்கான முக்கிய மூன்று முன்னுரிமைகள்
இன்றைய நாள் முடிவிலே நாளைய நாளுக்கான வேலையினைத் தொடங்குங்கள். இதைத்தான் அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமா அவர்களும் கூட செய்கிறார், அவரின் அடுத்தநாள் இன்றைய நாளின் முடிவிலிருந்தே தொடங்கி விடுகிறது. ஒவ்வொரு நாள் முடிவிலும் அவர் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், முடிக்க வேண்டிய இலக்குகள் என தனக்கான முக்கிய மூன்று முன்னுரிமைகளை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்வார். இதைத்தான் பல எழுத்தாளர்களும் செய்கின்றனர். நாளின் முடிவில் அவர்கள் அடுத்தநாள் எதைப் பற்றி எழுத வேண்டும், எப்படித் தொடங்க வேண்டும் என முடிவு செய்துவிடுகிறார்கள். இதனால்தான், ஒரு நாளின் தொடங்க வேலைகளை விரைவாகச் செய்ய முடிகிறது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். நாளின் முடிவுக்கான செயல்பாடாக, நாளைய வேலைக்கான நோக்கங்கள், பணிகள், கால அட்டவணை மற்றும் வெளிப்படுத்த வேண்டிய விளைவுகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், இவை உங்களின் கனவு இலக்குகளைப் பொறுத்து வேறுபடும்.
எது எப்படியிருந்தாலும், நீங்கள் தூங்கும் முன் நாளை முடிக்க வேண்டிய முக்கியமான மூன்று வேலைகளைக் குறித்துக்கொள்ளுங்கள், இதன் விளைவினை நீங்களே காணலாம்.
3. தெளிவான இலக்குகள்
இரண்டு மனதுடன் எந்த வேலையையும் செய்யக்கூடாது. அதாவது, ஒரே இலக்கு மட்டும்தான் உங்கள் மனதில் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இலக்கினை மாற்றிக்கொண்டே இருப்பது, இறுதிவரை நம்மை எதையுமே தெளிவாக செய்யவிடாது. இதற்கு உங்கள் மனது ஒரு நிலையாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை நோக்கி சலனப்படக்கூடாது. அதற்காகத்தான் ஒவ்வொரு நாள் முடிவிலும் நமது தெளிவான இலக்கினை நினைவுகூர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு நாள் வேலைக்குப் பின்னரும் நமது மூளை அதேயளவு புத்துணர்ச்சியுடன் இருப்பது இல்லை. புத்துணர்வு இல்லாத மூளை புதிதாக யோசிக்கவும் செய்யாது, தெளிவாக சிந்திக்கவும் செய்யாது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் பிரச்சனையாக இருப்பதாகத் தோன்றும். இதற்காகத்தான் உலகிலேயே மிகவும் கடினமான இராணுவத்தினரிடம் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது, அதில் அவர்கள் தங்களின் தெளிவான நிலைக்கு திரும்புவதற்கு சில மணித்துளிகள் சீருடையினை கழற்றுவது அல்லது மனதினை வேறு எதிலாவது கவனத்தில் ஆழ்த்துவது போன்றவை உதவுவதாக குறிப்பிட்டிருந்தனர். அதுபோலத்தான் நாமும் நமது மூளையினை தெளிவாக வைத்திருக்க தினமும் முயற்சி செய்ய வேண்டும்.
இதற்காக சிறிய தொலைவு வரை நடக்கலாம், உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம், அப்படியும் உங்களின் அழுத்தம் குறையவில்லையா? யோகா கற்றுக்கொள்ள செல்லுங்கள், பொழுதுபோக்கினை அதிகரியுங்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிடுங்கள். ஆனால் எதிலும் ஒரு அளவு இருக்கட்டும்.
4. சுகமான தூக்கம் – தெளிவான முடிவு:
சுமார் 70 மில்லியன் அமெரிக்கர்கள், தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தொழிலதிபர்கள். தனது தொழிலைப் பற்றிய சிந்தனைகள் இரவிலும் அவர்களை தொந்தரவு செய்வதே இதன் காரணம். தொழிலைப் பற்றிய அவர்களின் கவலை, சோர்வினை ஏற்படுத்தக்கூடியது. எதற்கும் அஞ்சாமல் தூக்குங்கள், நாளைய நாள் நமக்கு நல்ல நாளாக அமையும் என நம்புங்கள். உங்களின் படுக்கையில் சாப்பிடுவது, தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள். படுக்கையறை சுகமான தூக்கத்திற்கு மட்டும் உதவட்டும். அளவான தூக்கம் உங்களின் அடுத்த நாளை சரியாக துவங்குவதற்கான மிகச்சரியான முடிவு.
5. உங்கள் விருப்பத்திற்கான செயல்
நாளின் 24 மணி நேரமும் நாம் வேலை செய்வதற்கு நாம் இயந்திரம் அல்ல. நாள் முழுக்க வேலை செய்துவிட்டு இரவிலும் அதையே தொடர்ந்தால் அந்த இலக்கின் மீது நாளைடவில் வெறுப்புதான் தோன்றும். அதனால் நாளின் முடிவில் உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்யுமாறு வைத்துக்கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் அவ்வளவுதான்.
மேற்கூறியவற்றை எல்லாம் சொல்வது எளிதுதான் என்றாலும், நாம் செய்வது சற்று கடினம்தான். கடினம் தானே தவிர முடியாத காரியம் இல்லை. தொடர்ந்து இதனை செய்துபாருங்கள் ஒரே மாதத்தில் உங்களில் ஏதாவது மாற்றம் தெரியும்.
No comments:
Post a Comment