Social Icons

Wednesday, November 26, 2014

'வாட்ஸ் அப்'பில் நீல நிற டிக்கை செயலிழக்க செய்யும் வசதி அறிமுகம்!

தொகுப்பு: ALM.SAFRAS

வாட்ஸ் சேஜிங் அப் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய வசதி முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் சர்ச்சையும், விவாதமும் சூடுபிடித்த நிலையில் வாட்ஸ் அப், இந்த வசதி வேண்டாம் என்றால் அதை நீக்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. வாட்ஸ் அப் சேவையில் பரிமாறப்படும் செய்தி படிக்கப்பட்டதா என்பதை உணர்த்தும் நீல நிற டிக் வசதி சமீபத்தில் அறிமுகமானது. ஒரு டிக்குகள் செய்தி அனுப்பட்டதை உணர்த்தும். இரண்டு டிக் அது சென்றடைந்துவிட்டதைத் தெரிவிக்கும். நீல நிறமாக இரண்டு டிக்குகள் தோன்றினால் அந்தச் செய்தி படிக்கப்பட்டதாகப் பொருள்.

ஆனால் இந்த வசதி பலத்த அதிருப்தியை உண்டாக்கியது. செய்திகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இது ஏற்படுத்துவதாகப் பயனாளிகள் கருதினர். பதில் அளிக்கப்படாத செய்தி எனும் சங்கடத்தையும் தேவையில்லாமல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.பயனாளிகளின் பரவலான அதிருப்தியை அடுத்து வாட்ஸ் அப், இந்த அம்சத்தை விரும்பாவிட்டால் அதைச் செயலிழக்க செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. செட்டிங் அமைப்பில் பிரைவசி பகுதிக்குச் சென்று இதைச் செயலிழக்க வைக்கலாம். ஆண்ட்ராய்டு பயனாளிகள் வாட்ஸ் அப் புதிய வர்ஷெனை டவுன்லோடு செய்து இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ் அப் இணையதளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips