Social Icons

Wednesday, November 26, 2014

உலகின் முதலாவது சூரிய சக்தி சைக்கிளோட்டப் பாதை

 தொகுப்பு: MJM Razan
சூரிய சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யக்கூடிய உலகின் முதலாவது சைக்கிளோட்டப் பாதை நெதர்லாந்தில் நேற்றுமுன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை முழுவதும் 3.5 மீற்றர் நீளமும் 2.5 மீற்றர் அகலமும் கொண்ட சூரியசக்தி தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. சோலாரோட் என அழைக்கப்படுகின்றன.

இப்பாதையில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக  சறுக்கலை தவிர்க்கும் வகையிலான மேற்பரப்பைக் கொண்ட விசேட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பாதையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போது நெதர்லாந்தின் தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்படுகிறது.


ஆனால், எதிர்காலத்தில் வீதிகளின்  மின்சாரத்த் தேவைகளுக்கு இந்த சைக்கிள் பாதை மூலம் பெறப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக துவிச்சக்கர வண்டிப் பாவனை கொண்ட நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும்.  நெதர்லாந்தில் சுமார் 140,000 நீளமான துவிச்சக்கர வண்டிப் பாதை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips