தொகுப்பு: M.J.M Razan
தொலைக்காட்சிப்
பெட்டிகளில் இணையதள வீடியோக்களைப் பார்க்கும் வசதியை வழங்கும் புதிய
கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் க்ரோம்கேஸ்ட்
(ChromeCast) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியின் மூலம்
ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் போன்றவற்றில் உள்ள
வீடியோக்களைக் காண முடியும்.
பென் டிரைவ் வடிவிலான இந்தக் கருவியை டிவியில் உள்ள எச்.டி.எம்.ஐ ( HDMI ) இணைப்பில் பொருத்திக் கொள்ள முடியும்.
வீட்டில் இண்டர்நெட் வைபை (wi-fi) இணைப்பு இருந்தால், நேரடியாக இணையதள விடியோக்களையும் டி.வி.யில் காணலாம்.
இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் போன்றவற்றை ரிமோட் கண்ட்ரோல் போலப் பயன்படுத்தலாம்.
ஏற்கெனவே சந்தையில்
இருக்கும் ஆப்பிள் டி.வி. என்ற கருவிக்கு, கூகுள் க்ரோம்கேஸ்ட் போட்டியாக
இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்தக்
கருவி விற்பனைக்கு வந்திருக்கிறது.
க்ரோம்கேஸ்ட் தவிர, நெக்சஸ் 7 டேப்லெட்டின் புதிய பதிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment