தொகுப்பு: MJM Razan
தேவையான பொருட்கள்:6 இட்லி (பிசைந்து)
1 பெரிய வெங்காயம் (சிறிதாக நறுக்கியது)
1 அல்லது 2 பச்ச மிளகாய் (சிறிதாக நறுக்கியது)
1/2 கேரட் (துருவியது)
1/4 கப் சமயல் எண்ணெய்
3 காய்ந்த மிளகாய்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி உலுந்து
1 கை அளவு கறிவேப்பிலை
3 மேஜை கரண்டி எண்ணெய்
1 சிட்டிகை (pinch) மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
1. முதலில் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை, மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
2. அதன் பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்ச மிளகாய், தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்.
3. அதில், பிசைந்து வைத்த இட்லியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு,உதிரி ஆகும் வரை கிண்டவும்.
4. இதை சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

No comments:
Post a Comment