தொகுப்பு: MJM Razan
தேவையானவை: நாட்டுக்கோழி – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 3 (நறுக்கவும்), நறுக்கிய தக்காளி – 3 கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், தனியாத்தூள் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகுத்தூள் – 3 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இலை, பட்டை, லவங்கம் – தலா 2, எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, எண்ணெய் ஊற்றி… சோம்பு, பட்டை, லவங்கம், கறிவேப்பிலையை தாளித்துக் கொள்ளுங்கள். இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். அடுத்ததாக, தக்காளியைப் போட்டு சுருள வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்கவும். இதனுடன் நன்கு கழுவி சுத்தம் செய்த கோழி இறைச்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். கூடவே, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு வதக்குங்கள். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் வேகவிடுங்கள். இதனுடன் மிளகுத்தூளை சேர்த்து நன்கு வேகவிடுங்கள். குழம்பு நன்கு கொதித்ததும் இறக்கி, இட்லியோடு தொட்டுச் சாப்பிட்டால்… காலைப் பொழுது அமோகமாக நிறைவடையும்
No comments:
Post a Comment