Social Icons

Tuesday, January 21, 2014

கின்னஸில் இடம் பிடித்த 100 அடி நீள சொகுசு கார்...!

தொகுப்பு: M.J.M Razan
உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரின் நீளம் 100 அடி. 26 சக்கரங்களை கொண்ட இந்த காரில், ரெயில்களில் உள்ளது போல் முன்பகுதியில் ஒரு டிரைவர் கேபினும், பின் பகுதியில் ஒரு டிரைவர் கேபினும் அமைந்துள்ளது.
குறுகிய தெருக்களிலும் சுலபமாக திரும்பும் வகையில், காரின் நடுப்பகுதி வளைந்து, மடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் கண்காட்சிகளில் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த கார் முதலில் தயாரிக்கப்பட்டது.

ஹாலிவுட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்கு இணையாக இந்த காரின் உள்ளே, அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்படுள்ளன. குளியல் தொட்டி (ஜக்குஸி), பார், ஹெலிபேட், செயற்கைக்கோள் ஆண்டெனா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மினி அரண்மனை போல் உள்ளது இந்த ‘மெகா’ கார்.

இந்த சொகுசு காருக்கு சட்டபூர்வமாக சாலைகளில் ஓடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.

உலகின் மிக நீளமான சொகுசு கார் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த காரின் ஒரு மணி நேர வாடகை, பல லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips