Social Icons

Sunday, April 10, 2016

எலுமிச்சை சாறுடன் தேன் குடிப்பது நல்லதா?

தொகுப்பு: MJM Razan
வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் அல்லது நெல்லிக்காய் சாறு அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் "சி', உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாய், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் இச்சாறுகள் அவசியமானவை. வைட்டமின் "சி' சத்து ஈறுகளை பன்மடங்கு பலப்படுத்தும் சக்தி கொண்டது. தேனில் உள்ள நற்குணங்கள் வாயை சுத்தமாக வைக்க உதவும். இவற்றை காலையில் அருந்துவதில் தவறு இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை பலர் மறந்து விடுகின்றனர். அதாவது இந்த சாறுகளில் அமிலத்தன்மை குறிப்பிடும் அளவிற்கு உள்ளது.


இவை பற்களின் எனாமலை அரிக்கக் கூடியவை. இதற்காக பயப்படத் தேவையில்லை. எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து குடித்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது அந்தச் சாறுகள் பற்களின் மேல் அதிக நேரம் தங்காமல் தடுக்கும். இதனால் பற்களும் தேயாமல் இருக்கும். ஏற்கனவே பல் தேய்மானத்தினாலோ அல்லது வேறு காரணங்களாலோ பல் கூச்சம் உள்ளவர்கள், இதுபோன்ற சாறுகளை குடிக்க முடியாமல் அவதிப்படுவர். இவற்றை அருந்துவதை நிறுத்த தேவையில்லை. கூச்சத்திற்கான சிகிச்சையை செய்து விட்டு, பின் இச்சாறுகளை குடிக்கலாம். பற்களும், ஈறுகளும் ஆரோக்கியமாக இருந்தால், இதுபோன்ற நன்மைதரும் சாறுகளை எந்த தடையும் இன்றி காலையில் அருந்தலாம்.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips