Social Icons

Friday, June 5, 2015

குல்ஃபி குலோப்ஜாமூன்

தொகுப்பு: MJM Razan
தேவையானவை:

 பால்- அரை லிட்டர்,
 கார்ன்ஃப்ளார்மாவு  – ஒரு ஸ்பூன்
 குங்குமப்பூ – சிறிதளவு
 சர்க்கரை – அரை கிலோ
 குலோப்ஜாமூன் – 10
 ஏலக்காய்தூள் – ஒரு ஸ்பூன்.


செய்முறை:

 பாலை கால் லிட்டராக காய்ச்சவும். கார்ன் ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் பாலில் சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டியாக  ஆனதும் இறக்கி, ஆறியதும் குங்குமப்பூ, ஏலப் பொடி சேர்க்கவும். ஜாமூன்களை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். ‘குல்ஃபி அச்சு’க்களை (கடைகளில் வாங்கலாம்) எடுத்து, ஒவ்வொன்றிலும் முதலில் ஒரு கரண்டி பால் ஊற்றி, அதன் மேல் ஜாமூன் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் இன்னும் சிறிது பால் குழம்பை ஊற்றி மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்தால், புதுவிதமான குல்ஃபி குலோப்ஜாமூன்
 ரெடி.









No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips