Social Icons

Saturday, March 28, 2015

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய அப்பிளிகேசன் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க ‘ராகெம்’ என்ற நிறுவனம் ஒரு புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 
 இந்த புதிய அப்ளிகேஷன் பற்றி, நியூயார்க்கில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகெடு கூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுப்பிய தேவையில்லாத செய்திகளை, ஒரே நேரத்தில் தங்களுடைய மற்றும் தாங்கள் அனுப்பிய நண்பருடைய செல்போனிலிருந்தும் நீக்க முடியும். பாதுகாப்பு தோல்விகள், தினசரி தலைப்பு செய்தியில் இடம் பெறும் அளவிற்கு இருப்பதால், மக்கள் தங்களுடைய தொடர்புகளும், அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர்.“ என்றார். செய்திகளை அழிக்கும் வசதி மட்டுமின்றி, ராகெம் (RakEM) தரவுகள், புகைப்படம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது.








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips