Social Icons

Thursday, March 12, 2015

ஆசஸ் 'ஜென்ஃப்ளாஷ்' செனான் ஃப்ளாஷ் டாங்கிள் மற்றும் 'லாலிஃப்ளாஷ்' டார்ச் அறிமுகம்

தொகுப்பு: MJM Razan
ஆசஸ் நிறுவனம் ZenFone 2 ஸ்மார்ட்போனுடன் புதிய வகைகள் கைப்பேசிகளை தைவானில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ZenFone தொடர்களை தவிர நிறுவனம் ஜென்ஃப்ளாஷ் மற்றும் லாலிஃப்ளாஷ் என்று பெயரிடப்பட்ட புதிய துணைக் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 


ஆசஸ் ஜென்ஃப்ளாஷ் துணைக் கருவி என்பது 'செனான் ஃப்ளாஷ் டாங்கிள்' ஆகும் மற்றும் இது யுஎஸ்பி OTG வழியாக ஸ்மார்ட்போனில் இணைக்கப்படுகிறது. இந்த சாதனம் தொலைபேசியின் பின்புற பேனலில் ஒட்டி கொள்ளலாம். மற்றும் இது வழக்கமான வழக்கமான எல்இடி ப்ளாஷ் விட '400 மடங்கு' பிரகாசமான ஃபிளாஷ் வழங்குகிறது என்று கூறப்படுகிறது. ஆசஸ் நிறுவனம் பொருந்தக்கூடிய துணைக் கருவிகள் பற்றி விரிவான தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஆசஸ் லாலிஃப்ளாஷ் என்று பெயரிடப்பட்ட துணைக் கருவி லாலிபாப் வடிவத்தில் வருகிறது மற்றும் டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. மேலும், ஆசஸ் நிறுவனம் பொருந்தக்கூடிய துணைக் கருவிகள் பற்றி விரிவான தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை. சாதனம் (எங்கேட்ஜெட் வழியாக) அதன் சொந்த பேட்டரி பேக் என்று கூறப்படுகிறது. மற்றும் இது ஹெட்போன் போர்ட் அல்லது 3.5 மிமீ ஆடியோ ஜாக் வழியாக தொலைபேசியில் இணைக்கப்படவுள்ளது. லாலிஃப்ளாஷ் நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 

தற்போது, தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. மே-லும் ஆசஸ் நிறுவனம் ZenFone ஸ்மார்ட்போன்கள், ஆசஸ் ஸ்மார்ட்போன்கள், அல்லது மற்ற கைபேசிகள் உடன் ஜென்ஃப்ளாஷ் மற்றும் லாலிஃப்ளாஷ் துணைக் கருவிகள் இணைக்கப்படுவதை பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

ஆசஸ் நிறுவனம் திங்கட்கிழமை அன்று புதிய ZenFone தொடரில், ஆசஸ் ZenFone 2 ZE551ML ஸ்மார்ட்போன் (4ஜிபி ரேம்) TWD 8,990 (சுமார் ரூ.18,000) விலையிலும், ஆசஸ் ZenFone 2 ZE551ML ஸ்மார்ட்போன் (2ஜிபி ரேம்) TWD 6,990 (சுமார் ரு.13,900) விலையிலும், ஆசஸ் ZenFone 2 ZE550ML ஸ்மார்ட்போன் TWD 5,990 (சுமார் ரூ.11,900) விலையிலும், ஆசஸ் ZenFone 2 ஸ்மார்ட்போன் TWD 4,990 (சுமார் ரு.9,900) விலையிலும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. 

நிறுவனத்தின் புதிய ZenFone 2 தொடரின் கைபேசிகள் கிடைக்கும் விவரங்கள் குறித்து விரிவான விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. தைவானை தவிர ZenFone 2, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மார்ச் மாதம் முதல் கிடைக்கக் கூடியதாக இருக்கும். மற்ற நாடுகளான இத்தாலி மற்றும் இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தொடங்கும். ஆசஸ் ZenFone 2 ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் வெளியிடப்படும். 








No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips