Social Icons

Friday, February 20, 2015

ஆடுகளத்தில் விளையாட்டு வீரர்களுக்கு சக்தியை கொடுக்க தக்காளியை ஊட்டும் ரோபோ

தொகுப்பு: MJM Razan
உலகின் மின்னணு நிறுவனங்கள் அனைவரும் கை கால்களில் அணியக்கூடிய வியரபுள் சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றனர். அதன் வரிசையில் ஒரு ஜப்பனீஸ் காய்கறி சாறு தயாரிப்பாளர் வியரபுள் தக்காளி இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். டோமடன் என்ற பெயரை கொண்ட தக்காளி இயந்திரத்தை முதுகுப்பை போல மாட்டிக்கொள்ளலாம். இதில் நடுத்தர அளவு கொண்ட ஆறு தக்களாளியை இயந்திரத்தின் பின்பகுதியில் உள்ள டியூப்பில் நிரப்பப்படும் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள டோக்கியோ மராத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு இந்த டோமடன் சிறந்த சக்தியை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


தக்காளியில் சோர்வு போக்கும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது, என்று ககோமி உணவு தயாரிப்பாளர் நிறுவனத்தில் ஊழியரான பணியாற்றும் ஷிகேநோரி சுசூகி கூறியுள்ளார். 

இந்த டோமடன் பார்ப்பதற்கு சிறிய மனித உருக்கொண்ட ரோபோ போல இருக்கும், அதன் தலையில் தக்காளியை வைத்திருக்கும், மற்றும் விளையாட்டு வீரரின் தோள்களின் மேல் நெருக்கமாக அமர்ந்திருக்கும். 

இந்த டோமடன் பாதத்தில் உள்ள சிறிய நெம்புகோலை அழுத்தும்போது இயந்திரத்தின் பின்பகுதியில் உள்ள தக்காளி வெளியே வரும், அதனை டோமடன் தனது இரு கைகளால் பிடித்துக் கொண்டு விளையாட்டு வீரர்களின் வாயின் முன் வைக்கும். 

நாங்கள் இந்த இயந்திரத்தை முடிக்க சுமார் 100 தக்காளி பயன்படுத்தப்பட்டது என்று நாவ்மிசி டோசா கூறியுள்ளார். அதன் காட்சி வடிவமைப்பில் நாங்கள் பெரும்பாலும் கவனம் செலுத்தினோம். 

எட்டு கிலோ (18 பவுண்டு) எடை கொண்ட டோமடனை அணிந்து கொண்டு சனிக்கிழமை அன்று ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்கள்) ஓடுவேன் என்று ககோமியின் சுசூகி கூறியுள்ளார். ஒரு F1 மெக்கானிக் போல, என் கருவிகளை சுமந்து அவரது பக்கத்தில் நானும் ஓடுவேன் என்று டோசா கூறியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முழு டோக்கியோ மராத்தான் போட்டியில் ககோமியில் இருந்து ஒரு விளையாட்டு வீரர் 3 கிலோகிராம் எடை கொண்ட வியரபுள் தக்காளி இயந்திரமான பெடிட்-டோமடன் அணிந்து கலந்துகொள்வார் என்றும் சுசூகி கூறியுள்ளார்.






No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips