Social Icons

Thursday, November 13, 2014

தலையை கிறுகிறுக்க வைக்கும் கண்ணாடிபாலம்

தொகுப்பு: MJM Razan
விடுமுறையை கழிக்க பல கண்டங்களை கடந்துசெல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இதற்காக புதிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், அவர்களின் தலையை கிறுகிறுக் கவைக்கும் காட்சி அடங்கிய கண்ணாடியிலான ஒரு பாலத்தை லண்டன் அரசாங்கம் அமைத்துள்ளது.

குறித்த பாலம் 120 வருடங்கள் பழமையானதாயினும் அதனை புதுப்பிக்கும் முகமாக அதே பாலத்தில் சிறிய தூரத்துக்கு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.


36 அடி நீளத்தையும் 6 அடி அகலத்தையும் கொண்டுள்ள நடைபாதையானது, தற்போது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட லண்டனில் உள்ள தோமஸ் நதிக்கும் மேலே 140அடி உயரத்துக்கு பாலத்தின் உயர்மட்ட நடைபாதை முழுவதும் நீடிக்கும் படியாக இக்கண்ணாடி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

லண்டன் வாழ்கையில் எப்போதுமே கண்டிராத இப்பாலமானது 20 வலுவான தொகுதி கண்ணாடிகளையும் கொண்டுஅமைக்கப்பட்டுள்ளது. ஒருகண்ணாடி 1,000 பவுண்ட் எடையைகொண்டுள்ளது.

இந்தபாலத்தில் நடப்பவர்கள் கீழே பார்த்தார்களாயின் பறப்பது போன்றதொரு உணர்ச்சி ஏற்படும். இதனுள் பிரவேசிப்பதற்கான கட்டணமும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips