Social Icons

Monday, February 17, 2014

லேப்டாப்பை பாதுகாப்புக்கு சில யோசனைகள்!


தொகுப்பு: MJM Razan
இன்றைய யுகத்தில் கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அவசியம். அதிலும் லேப்டாப், டேப்லட்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. லேப்டாப் பாதுகாப்புக்கான சில யோசனைகள் இங்கே..

லேப்டாப்பின் திரை மிக முக்கியம். திரையை துடைக்கும் போது சரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும். திரை மிக அழுத்தினால் சேதமடையவும் வாய்ப்புகள் உண்டு. பயணம் செய்யும் போது லேப்டாப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.


லேப்டாப்பை தூக்கிச் செல்ல முதுகில் மாட்டும் பேக்கை பயன்படுத்துங்கள். உணவு நேரம் அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் நேரம் ஆகிய நேரங்களில் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன் லேப்டாப்பிற்கு அதிக ஆயுளை தரும்.
தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் லேப்டாப்பை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், லேப்டாப்பை அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும்.

லேப்டாப் வாங்கும் போதே ஃபயர்வால் நிறுவப்பட்டிருக்கும். அது இல்லையென்றால் உங்கள் லேப்டாப்பை பாதுகாக்க ஃபயர்வலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது புதிதாக வாங்கியோ நிறுவுங்கள்.அசல் உரிமத்துடன் கூடிய ஆண்டி-வைரஸ் சாப்ட்வேர்களை நிறுவியிருப்பது நல்லது.

லேப்டாப்பை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்க வேண்டும். எப்போதும் லேப்டாப்பை ஒரு தட்டையான பரப்பில் வைத்திருந்தால் அது சேதமடையாமல் பாதுகாக்கும்.

லேப்டாப்பிற்கான குளிர்ச்சியை ஏற்படுத்தும் விசிறி சந்தையில் கிடைக்கிறது. அதில் ஒன்றை வாங்கி பயன்படுத்துங்கள். இது லேப்டாப் அதிக சூடாக்குவதை தடுக்கும். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் லேப்டாப்பை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips