தேவையான பொருட்கள்:
மெல்லிய துண்டுகளாக நறுக்கிய மீன் &
400 கிராம் மஞ்சள் தூள் &
அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் &
ஒரு தேக்கரண்டி உப்புத் தூள் &
ஒரு தேக்கரண்டி எண்ணெய் &
100 கிராம் ( இந்த அளவு அநேகமாக சரியாக இருக்கும். உப்பும், காரமும் வேண்டுவோர் கொஞ்சம் கூடுதலாகவும், குறைவாக வேண்டுவோர்
கொஞ்சம் குறைவாகவும், மிளகாய் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். ஆனால் இரண்டையும் சம அளவாகச் சேர்க்கவும்.)
செய்முறை:
மீனை வறுப்பதில் இருமுறைகள் உண்டு. ஒன்று நிறைய எண்ணெயில் மீனை மூழ்கும்படி போட்டு வறுப்பது.
அடுத்து கட்லெட் போல அடைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய்ச் சுற்றிலுமாக ஊற்றி எடுப்பது.
முதல் வகையில் வாணலியில் நிறைய எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மீன் துண்டுகளை எண்ணெய் கொண்ட மட்டும் போட்டு
வேக வைக்கவும். லேசாக திருப்பி விட்டு இருபுறமும் வெந்து மசாலா வறுபட்டதும் எடுக்கவும்.
இரண்டாவது வகையானால் அடைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மீனை பரவலாக அடுக்கி ஒவ்வொரு துண்டின்
மேலும் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைகவிடவும். ஒருபுறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு இருபுறமும்
ஒன்றுபோல் சிவந்ததும் எடுக்கவும்.
வாளை, மத்தி போன்ற வாய்வு மீன்களானால் மிளகாய்த்தூளுடன் நாலு பூண்டும், அரைத்தேக்கரண்டி மிளகும் சேர்த்து அரைத்து கொண்டு
மீனில் தடவி வறுக்க வேண்டும். நெத்திலி, மத்தி அல்லது அதைவிட சற்று பெரிய மீன்களை வயிற்றுப் பகுதியில் கீறி சுத்தம் செய்துவிட்டு
முழமையாக வறுக்கவும். மீன் கனமானதாக இருந்தால் உடல் பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் கத்தியால் கீறிக்கொண்டு
உப்பு, மசாலா தடவவும்.
No comments:
Post a Comment