தொகுப்பு: MJM Razan
குழந்தைகள் படிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், படிப்பு கெட்டுவிடும், அருகிலிருந்து பார்த்தால் கண்களுக்கு நல்லதல்ல என்று சொல்வோம்.
அதே தொலைக்காட்சியை, பெரியவர்கள் அதிக நேரம் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுவர். 3 மணி நேரத்திற்கு மேல் பார்த்தால் இதய அடைப்பும், அதிக நேரம் பார்த்தால் இளம் வயதிலேயே மரணமும் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு, கிராண்ட் வெட் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும், சோம்பேறித்தனமாக அதிக நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை விளக்கி உடல் உழைப்பை அதிகப்படுத்தச் செய்வதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்-று பிராங்க் தெரிவித்துள்ளார். கிராண்ட் வெட், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நீரிழிவு நோயோடு உடல் பருமனும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் தினமும் 5 மணி நேரமும், அய்ரோப்பியர்கள் 3_4 மணி நேரமும் தொலைக்காட்சி பார்ப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாள் முழுவதும் மெகா தொடர்களில் மூழ்கியிருக்கும் நம் மக்கள் சிந்திக்க வேண்டும்..!
No comments:
Post a Comment