தொகுப்பு: MJM Razan
பேச்சுக்கு இரண்டு பக்க மூளைகளும் உதவுகின்றன என்ற சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுவரை எடுத்த ஆய்வுகளுக்கு எதிர்மறையாக இந்த கருத்து உள்ளது.
பேசுவதற்கு நம் தலையில் உள்ள இரண்டு பக்க மூளைகளும் உதவுவதாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பேசுவதற்கு மூளையின் ஒரு பகுதி மட்டுமே உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்திருந்தன.
கவனித்தல் மற்றும் பேசுதல் ஆகியவற்றை மூளையின் ஒரு பகுதி மட்டுமே செய்வதாக வந்த ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், பேச்சையும் மூளையின் ஒரு பகுதி மட்டுமே செய்வதாக இதுவரை எடுத்த ஆய்வுகள், மறைமுகமாகக் கணக்கிட்டன. ஆனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள ஆய்வு நேரடியாக கணக்கிட்டது.
இதன் அடிப்படையில் பேச்சு அலைகள் நேரடியாக உள்ளே சென்று அவை பேச்சிலும் உணர்ச்சியிலும் பிரதிபலிப்பதாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இருதரப்பு மூளைகளும் பேச்சுக்கு உதவுகின்றன என்ற முடிவு வெளியானது.
எனினும், பேச்சுக்கு நமது மூளை எப்படி திறம்பட பதிலளிக்கிறது என்பதுடன் பிணைந்த துடிப்புக்கு நாம் எப்படி சரியாக பதிலளிப்பது என்பது குறித்த ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment