Social Icons

Thursday, December 18, 2014

செல்போனை அதிகநேரம் பயன்படுத்துபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

தொகுப்பு: MJM Razan
செல்போன் இன்றி, இயங்காது உலகு’ என புதியதாக ஒரு குறள் படைக்கும் அளவிற்கு காலை தொடங்கி, இரவு வரை கையில் செல்போனுடனே காலம் கழிகிறது நமக்கு.

புதிதாக வரும் அறிவியல் தொழில் நுட்பங்கள் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், அதற்காக வாழ்க்கையின் நீண்ட நேரத்தை அதற்காகவே செலவழிக்காமல் இருப்பதன் மூலம் பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.


* மணிக்கணக்கில் செல்போன் பயன்படுத்தும்போது நம் கழுத்து மற்றும் முதுகெலும்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

* கழுத்தை 60 டிகிரி கோணத்தில் சாய்க்கும்போது நம் முதுகெலும்பு, 27 கிலோ எடை அளவுக்கு அழுத்ததையும், 45 டிகிரி கோணத்தில் தொடர்ந்து கழுத்தைசாய்க்கும்போது, 22 கிலோ எடை அழுத்தத்தையும், 30 டிகிரி கோணத்தில் 18 கிலோ எடையையும், 15 டிகிரி கோணத்தில் 12 கிலோ எடை அழுத்தத்தையும் முதுகெலும்பு பெறுவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

* இந்த அழுத்தத்தால் கழுத்து வலி மற்றும் முதுகெலும்புப் பிரச்னையுடன் மன அழுத்தத்துக்கும் நாம் ஆளாக நேரிடும்.

* சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், முதுகெலும்புக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்போது, வலியால் அறுவைச் சிகிச்சையும் செய்ய நேரிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

* செல்போனை தொடரந்து உபயோகப்படுத்தும்போது கழுத்துவலி, முதுகெலும்புப் பிரச்னைகள் ஏற்படுவதோடு மட்டுமின்றி, எடை குறைப்பு, மலச்சிக்கல்,நெஞ்சு எரிச்சல், ஒற்றைத் தலைவலி மற்றும் சுவாசப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

* இரவு நேரங்களில் அதிகநேரம் செல்போனைப் பார்க்கும்போது கண் நரம்புகள் பாதிக்கப்படும்.

Read: http://www.tamilcnnlk.com/archives/328219.html

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips