Social Icons

Thursday, December 18, 2014

பேட்டரி கவலைக்குத் தீர்வு

எந்நேரமும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும்போது விரைவில் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போகும். அப்படிப்பட்ட நேரத்தில் அக்கம்பக்கத்தில் செல்போன் சார்ஜ் செய்ய இடம் இருக்கிறதா என அலைபாய்வதைவிட, ஒரு சாதாரண பேட்டரியில் செல்போனைப் பொருத்தி, அதை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? பிளான் வி சார்ஜர் இதைத் தான் சாத்தியமாகுவதாக சொல்கிறது. இந்தப் புதுமையான சாதனத்தில் ஒன்பது வோல்ட் பேட்டரியைப் பொருத்தி அதை மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் ஸ்மார்ட் போனில் இணைத்தால் 4 மணி நேரம் பேசக்கூடிய அளவுக்கு போனில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.


வெறும் கீ செயின் அளவில் இருக்கும் இந்த பேட்டரியை உங்கள் கீ செயினிலேயே அழகாகக் கேர்த்து எப்போதும் கையில் வைத்துக்கொள்ளலாம். பேட்டரி பேக் அப் சாதனத்தை வீட்டிலேயே மறந்துவிட்டுத் திண்டாட வேண்டிய அவசியம் இருக்காது. அட, அபாரமாக இருக்கிறதே! இந்தச் சாதனம் எங்கே கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? விரைவில் சந்தையில் எதிர்பார்க்கலாம்.

விவரங்களுக்கு: https://www.kickstarter.com/projects/1838401618/plan-v-the-failsafe-charger-you-cant-leave-home-wi

Read: http://tamil.thehindu.com/general/technology/பேட்டரி-கவலைக்குத்-தீர்வு/article6694408.ece

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips