தொகுப்பு: MJM Razan
தனிமையில் வாழும் மக்களுக்காக ஜப்பானின் நிறுவனமான யுனிகெயார், என்ற நிறுவனம் அரவணைக்கும் நாற்காலி ஒன்றை தயாரித்துள்ளது.
இலத்திரனியல் தொழினுட்பத்தில் அமைந்துள்ள இந்த நாற்காலி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச வீட்டு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காட்சி என்ற பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாற்காலியில் இரண்டு கைகள் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. அந்த கைகள் நீங்கள் உட்கார்ந்ததும் உங்களை அரவணைத்துக்கொள்ளும்.
ஆணுக்கு பெண்ணின் கைகளும், பெண்ணுக்கு ஆணின் கைகளும் இருக்கும்படியாக அமைந்திருக்கும் இந்த அரவணைக்கும் நாற்காலி தற்போது ஜப்பானில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
இலங்கை நாட்டின் பெறுமதிக்கு 54 ஆயிரத்து 810 ரூபா (46,000 யென்) விலையுள்ள இந்த நாற்காலியில் பெரும்பாலான பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்து வீட்டிற்கு வாங்கிச்செல்வதாகவும், விரைவில் இந்த நாற்காலி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் யுனிகெயார், நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment