Social Icons

Monday, December 15, 2014

ஃபேஸ்புக்கைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 ஆச்சரியமான உண்மைகள்!!!


தொகுப்பு: MJM Razan
உலகின் மாபெரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியான இன்டர்நெட்டின் வரலாற்றில் ஃபேஸ்புக் துவங்கப்படும் வரை சமூக வலைத்தளம் என்ற ஒன்றை எவரும் அறிந்திருக்கவில்லை. இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருப்பதுடன், சமூக வலைதளத்தின் அடித்தளம் அமைக்கப்படும் முன்பாக ஒரு மாபெரும் தோற்றம் மற்றும் மாற்றத்தை அடைந்துள்ளது.


உலகெங்கிலும் பலகோடி ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு நடுவில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனக்கே உரிய உலகத்தில் விவாதங்களை நடத்திக் கொண்டும் தங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் செய்யும் வேளையில், இந்த ஃபேஸ்புக்கைக் குறித்த, மனதை அதிர வைக்கும் உண்மைகளைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகிறது.



இப்போது சமூக வலைதளத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் ஃபேஸ்புக்கைப் பற்றிய, அருமையான, ஆர்வமூட்டக்கூடிய மற்றும் அசர வைக்கும் உண்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். ஒரு சாதாரண சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்டு இன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாறி உலகெங்கிலும் பரவியிருக்கும் இந்த நிறுவனத்தின் நினைத்துப் பார்க்க முடியாத சக்தியை குறித்து அறிந்து வைத்துக் கொள்வது பயனுள்ள ஒன்று.இதில் சில உண்மைகள் ஃபேஸ்புக்கைப் பற்றிய ரகசியங்கள் என்றும் கூறலாம். சுவாரசியமான இந்த பத்து உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுடன் தயாராகிவிட்டீர்களா? அப்ப வாங்க தெரிஞ்சிக்கலாம்..
துவக்கம் ஃபேஸ்புக் துவங்கிய முதல் கோடை காலத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குடும்பம் இந்த முயற்சியை காப்பாற்ற சுமார் 85,000 டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு, இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்தை உயிர்ப்புடன் வைக்க உதவியாக இருந்தது. இன்று இந்த நிறுவனம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,20,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அறியப்படுகிறது.
முதல் பங்கு விற்பனைஃபேஸ்புக் முதன்முதலில் தன் பங்குகளை நாஸ்டாக் பங்குச்சந்தையில் விற்கத் துவங்கிய போது, அதன் பங்குகளின் விலை 38 அமெரிக்க டாலர்கள் என்ற நல்ல விலையை பெற்றன. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரபலமான நிறுவனங்களான யாஹூ, க்ரூபான், லிங்க்டின், நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஐ எ சி ஆகிய நிறுவனங்களில் ஒட்டுமொத்த மதிப்பையும் மிஞ்சி சுமார் 100 பில்லியன் டாலர்கள் (சுமார் ஆறு லட்சம் கோடி ருபாய்) என்ற அபரிமிதமான அசுர வளர்ச்சியை அடைந்தது.
ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் இணைய தளங்கள்
சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள் ஃபேஸ்புக்கை இணைத்துக் கொள்ளும் வசதியை கொண்டுள்ளன.
20 நிமிடங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும்
ஒவ்வொரு 20 நிமிடமும் நம்பமுடியாத சுமார் 20 லட்சம் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அல்லது நட்பழைப்புகள் விடப்படுகின்றன. சுமார் 30 லட்சம் குறுஞ்செய்திகள் பரிமாற்றப்பட்டு சுமார் 10 லட்சம் தொடர்புகள் இணைக்கப்படுகின்றன.
ஒரு நாள் பயணம்
ஒரு நாளில் மட்டும், 35 கோடி படங்கள் பதிவேற்றம் (அப்லோட்) செய்யப்படுகின்றன. மேலும் சுமார் 450 பில்லியன் லைக்குகள் கொடுக்கப்படுகின்றன.
சீனா
சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், சுமார் ஒன்பதரை கோடி பேர் அதைப் பயன்படுத்துகின்றனர். ஆச்சரியம்… அல்லவா?
விவரங்கள் உள்ளடக்கம் (கன்டென்ட்)
ஃபேஸ்புக்கின் தொடர் உபயோகிப்பாளர்களுக்கு தினமும் சுமார் 1400 முதல் 1500 வெவ்வேறு விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன
500 டாலர் பரிசு! (இது நல்லாயிருக்கே)
ஃபேஸ்புக் நிறுவன விதிகளின் படி, உத்தரவாதமாக யாரேனும் அதன் மென்பொருள் விவரங்களில் குறைபாடுகளைக் கண்டறிந்தால் அவர்களுக்கு 500 டாலர் சன்மானமாக வழங்கப்படும்.
எண்ணற்ற மொழிகள்
இந்த உண்மை நம்புவதற்கு சற்று கடினமானது தான். ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு சுமார் 70 மொழிகள் உள்ளன.
ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி
2012-13 ஆம் ஆண்டு மட்டும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் உயர்ந்தது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips