Social Icons

Thursday, November 20, 2014

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

தொகுப்பு: MJM Razan
மெர்சிடிஸ் நிறுவனம் ஓட்டுனரில்லா புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது அதன் உட்புற தோற்றம் பார்ப்பதற்கு ஒரு பெரிய அறையில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். ஜெர்மன் கார் நிறுவனமான மெர்சிடிஸ், எதிர்காலத்தின் ஓட்டுனரில்லா கார் வசதி பற்றிய அனைத்து தகவல்களை தெரிவித்துள்ளது. அந்த காரின் நான்கு இருக்கைகளின் வடிவமைப்பு பயணிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு காஃபி டேபிள் வடிவம் போன்று உள்ளது. காரின் முன் இடத்தில் உள்ள பயணிகள் தங்களின் இருக்கைகளை சுற்றி திரும்பிக்கொண்டு ஓய்வெடுக்கவோ அல்லது பணிபுரிவதற்கோ நேரத்தை செலவிடலாம்.


'இந்த உட்புற தோற்றத்தின் கருத்து, நம் எதிர்காலத்தின் சொகுசுக்காக வரையறுக்கப்பட்டிருக்கிறது' என்று டெய்ம்லர் ஏஜி டிசைன் தலைவரான கார்டன் வாகேநர் கூறியுள்ளார். இந்த புதுமையான உட்புற கருத்தின் முக்கிய அம்சமானது, நான்கு சுழலும் லவுஞ்ச் இருக்கைகளை கொண்டதால் பயணிகள் அனைவரும் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ளலாம். மேலும், முன் பக்க இருக்கைகள் சுழலும் தன்மை கொண்டிருப்பதால் பயணிகள் காரில் சென்றுகொண்டிருக்கும் போதே தங்களின் இருக்கைகளை சுழற்றி மற்ற பயணிகளுடன் பேசலாம். பயணிகளின் சைகைகள் அல்லது தொடுதல் காட்சிகள் மூலம் வாகனத்தை இயக்க முடியும். கணினி திரையில் பயணிகளின் கண், கை மற்றும் விரல் இயக்கங்களை கொண்டு காரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி ஓட்ட முடியும்.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips