தொகுப்பு: MJM Razan
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் முறையாக அறிவிக்கப்பட்டதை
தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது புதிய ஆன்டிராய்டு டேப்ளெட்டான, நோக்கியா
என்1 மாடலை வெளியிட்டது. இந்த டேப்ளெட் தோற்றத்தில் ஆப்பிளின் ஐபேட் மினி
போன்று காட்சியளிக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்டிராய்டு லாலிபாப் நோக்கியா என்1 டேப்ளெட் வெளியானது
புதிய நோக்கியா என்1 டேப்ளெட் 7.9 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2048*1536 பிக்சல்
மற்றும் எல்ஈடி பேக்லைட் கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே முழுவதும் லேமினேட்
செய்யப்பட்டு காற்று புதகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கொரில்லா கிளாஸ் 3
கொம்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் இசட்3580 64 பிட் ஆடம் பிராசஸர் மற்றும் 2ஜிபி
ராம் கொண்டுள்ளதோடு 32ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு
ஸ்லாட் வசதியும் உள்ளது. மேலும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம்
இயங்குவதோடு நோக்கியா இசட் லான்ச்சரும் இதில் உள்ளது.
நோக்கியா என்1 டேப்ளெட் 8எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க
ஆட்டோபோக்கஸ் கேமராவும் உள்ளது. இதில் 1080பி வீடியோக்களையும் பதிவு செய்ய
முடியும். இந்த டேப்ளெட் 3.5 எம்எம் ஹெட்செட் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி 2.0
டைப் சி, வைபை, ப்ளூடூத் 4.0 இருப்பதோடு 5300 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது.
No comments:
Post a Comment