தொகுப்பு: MJM Razan
ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களை காண்பது மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான். அடிக்கடி மொபைல் ஹேங் ஆகி கடுப்பேற்றும். இது ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஏன் ஆப்பிளின் ஐ ஃபோன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
திடீரென நமது மொபைல் ஹேங் ஆகிவிட்டால் என்ன செய்யலாம் என பார்க்கலாம். முதலில் உங்க போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் முறைகளை பின்பற்றுங்கள் பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்.
ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லையெனில், தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை பிரஸ் செய்யவும். அவ்வாறு ரீஸ்டார்ட் செய்ய முடிய வில்லை எனில் ஃபோனின் பேட்டரியை கழற்றி விடுங்கள். உங்க போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள். ஹேங்கான பின் ஃபோன் ஆன் ஆகவில்லை என்றால் பேக்ட்ரி ரீசெட் செய்யவும், இது உங்க போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும்.ஆனால் இப்படி செய்வதன் மூலம், ஃபோனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும். இது பொதுவாக அனைவரும் அறிந்த விஷயங்கள்தான். என்றாலும் கூட பெரும்பாலனோர் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர்.
No comments:
Post a Comment