பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில்
பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு
பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு
தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு
வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com
->Settings->Security Settings -> Where You're Logged In
செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு
எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம்
வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity "
செய்துவிடுங்கள்.
மேலதிக
பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ்
செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம்.
அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம்
அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an emailஎன்பதையும், மொபைல் வசதி
இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால்
மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ் இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து
யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்
No comments:
Post a Comment