Social Icons

Wednesday, December 17, 2014

இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்

தொகுப்பு: MJM Razan
கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளித்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இணைய தள பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே யு டியூப் அப் மூலம் வீடியோக்களை ஆன்லைன் பார்க்கும்போது அது 48 மணி நேரத்துக் சேமித்து வைக்கப்படும். ஒருமுறை இவ்வாறு பார்த்தபிறகு 48 மணி நேரத்துக்குள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை பார்க்கலாம். மொபைல் அப் மூலம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. இதே வசதி பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தற்போது உள்ளது. அதையடுத்து இந்தியாவிலும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ‘‘இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது.


இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் இதன்பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்’’ என்றார். இதற்கென சரிகமா டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந்தம் செய்துள்ளது. அதுபோல் இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read: http://kathiravan.com/இன்டர்நெட்-இல்லாமல்-யு-ட123/

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips