Social Icons

Sunday, November 30, 2014

டூரிங் ஆபீஸ் ரெஸ்ட்ஹவுஸ்: அசத்தும் தொழில் நுட்பம்!


தொகுப்பு: MJM Razan
அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று தினசரி வாழ்க்கை போரடித்துவிட்டதா?  உங்களுக்காகவே ஒரு புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறது கலிபோர்னியாவைச் சேர்ந்த 'இடியோ' (Ideo) எனும் நிறுவனம்.

அந்தத் தொழில் நுட்பம், அலுவலகம் - வீடு இரண்டும் சேர்ந்த கார். கார் போன்று இருந்தாலும் நல்ல பெரிய ஒரு அறை போன்று காட்சியளிக்கும் இதில், அலுவலகத்துக்குத் தேவையான அத்தனை அம்சமும் இடம்பெற்றிருக்கிறது.

பார்க்கிங் வசதியுள்ள எந்த இடத்திலும் இதனை நிறுத்திக் கொள்ளலாம். உதாரணத்துக்குத் திங்கட்கிழமை பீச், செவ்வாய்கிழமை பார்க் என  வெவ்வேறு இடங்களை அலுவலகமாக்கி வேலை நாட்களை ஜாலி நாட்களாக்கிக் கொள்ளலாம்.
 

 முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்த வாகனத்துக்கு, ஸ்டீயரிங் கிடையாது. இதில் டிரான்ஸ்பரன்ட் வசதியும் உண்டு. எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டர் மூலம் குறிப்பிட்டுவிட்டால், அந்த இடத்துக்குப் போய் நிற்கும். டிராஃபிக் பிரச்னையே இல்லை. எந்த நேரத்தில் எப்படி இயங்க வேண்டும் என்பதை இதன் மெமரியில் பதிவேற்றபட்டுள்ளது.

இந்தத் தொழில் நுட்பம் கொஞ்சம் 'அப்டேட்' செய்யப்பட்டு, கடையில் இருந்து வாடிக்கையாளர் முகவரிக்குப் பொருட்களைக் கொடுத்து அனுப்புவது, டிரைவரே இல்லாமல் வாகனம் ஒட்டிச் செல்வது, வீடாகவும் பயன்படுத்துவது போன்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லாமே இதில் சாத்தியமாக்க இருக்கிறார்கள்.

கூடிய விரைவில் புழக்கத்தில் வர இருக்கும் இந்த வாகனத்தை, இந்தியாவில் மட்டுமே செயல்படுத்த யோசித்து வருகிறதாம் இடியோ நிறுவனம்.

ஆனால் நம்ம ஊர் சாலையில் இது சரிப்படுமா என்றுதான் தெரியவில்லை. வாகனம் யாரையாவது தெரியாமல் இடித்துவிட்டாலும் இடிபட்டவர் யாரிடம் சண்டை போடுவார்? அவருக்கு இணையாக அது நம்மூர் பாஷையில் சண்டை போட இன்னும் அதை அப்டேட் செய்யவில்லை.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips